Skip to main content

Posts

Showing posts from April, 2025

ஆப்பிள் துப்பாக்கி பெட்ரோல் நிலையம்

எழுதியவர்: த.அரவிந்தன் வகைமை: குறுங்கதைகள் வெளியீடு: குலுங்கா நடையான் எளியவும், மிகவும் நுட்பமுமான மனித உணர்வுகளையும், அவற்றின் மீதான சிக்கல்களையும் அலட்டல் இல்லாத மொழியில் குறுங்கதைகளாகப் பதித்திருக்கிறார் த.அரவிந்தன் என்னளவில் குறுங்கதை மீதும் மற்றும் அதன் வடிவம் குறித்தும் புது திறப்பை உண்டாக்கியிருக்கிறது. "ஆகாயம்" என்ற குறுங்கதை இருபத்தோராவது மாடியிலிருந்து அந்தக் குழந்தை, ஏன் கீழே விழுந்து இறந்து போனது எனத் தெரியவில்லை. ஆனால் , பால்கனி சுவருக்கு அருகில், அந்தக் குழந்தையைத் தூக்கி . இடுப்பில் வைத்துக் கொண்டு, அதன் அம்மா, எப்போதும், "அங்கே பார் , ஆகாயம் , ஆகாயம்" என்று காட்டியதை மட்டும் அறிவேன். கார்த்திக் பிரகாசம்...

கார்ல் மார்க்சும் தாணு ஆசாரியும் - தமிழவன்

நேரடி கூற்றுவியலில் இருந்து அப்பாற்படுவதோடு மட்டுமின்றி கதையின் போக்கே நிச்சயமற்ற தன்மைகளாலும், கதை மாந்தர்களின் இன்மைகளாலும் புனையப்பட்டிருக்கிறது. மேலும் வாசிப்பின் அவதானிப்பில் வாசகனாகப் புரிந்து தெளிவுற வேண்டிய பல இடைவெளிகள் விரவிக் கிடக்கிறது. இது கதையின் தலைப்பிலிருந்தே தொடங்குகின்றது. என்னளவில் தமிழவன் சிறுகதைகள் குறித்த திறப்பை இக்கதை உண்டாக்கியிருக்கிறது. அடுத்த சில தினங்களுக்கு வெவ்வேறு தருணங்களில் மாறுபட்ட மனநிலைகளில் வாசிக்க வேண்டும்.