தாயின் தாலாட்டுப் பாடலில் குழந்தை ஒய்யாரமாக அவள் மடியில் சிணுங்கிக் கொண்டே உறங்குவது போல பூக்களின் மடியில் காற்றின் தாலாட்டு இசையில் வண்டுகள் சௌகரியமாக உறங்கிக் கொண்டிருக்கின்றன.. பெண் இன்னோர் உயிருக்கு(வாண்டுகளுக்கு) தாயாகி பாலூட்ட "பூ"ப்பெய்துகிறாள்.. பூக்களோ வண்டுகளுக்கு தேனூட்டி தாயாகின்றன.. பூக்களுக்குத் தாய்மைப் பண்பு இருப்பதனால் தான் எப்பொழுதும் அதை விரும்புகின்றனர் போலிருக்கிறது ""பெண்கள்"" .. தன்னைப் போன்ற தாய்மைப் பண்பு இருக்கும் பெண்ணின் கூந்தலை அடைந்தாள் அது ஓர் மோட்சம் என்பதை உணர்ந்து தான் தன் இறப்பைக் கூட சிரிப்புடன் விரைந்து ஏற்றுக் கொள்கின்றன போலிருக்கிறது ""பூக்கள்"".. கார்த்திக் பிரகாசம்.. .