Skip to main content

Posts

சோர்பா என்ற கிரேக்கன்

எழுதியவர்: நீகாஸ் கசந்த்சாகீஸ் மொழிபெயர்ப்பு: கோ.கமலக்கண்ணன் வகைமை: நாவல் வெளியீடு: தமிழினி பதிப்பகம் சோர்பா எனும் நுண்மைகளின் ரசிகன் மனிதனுக்கும் உயரத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பலரும் வேண்டுகிறார்கள். சிலர் மனிதனுக்குத் தாழ்ந்த மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். ஆனால் மகிழ்ச்சியோ, மனிதனுக்குச் சமமான உயரத்தில்தான் வீற்றிருக்கிறது. -கன்ஃபூசியஸ் நவீன கிரேக்க இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளராகக் கருதப்படும், ‘நீகாஸ் கசந்த்சாகீஸ்‘ எழுதிய புகழ்பெற்ற நாவல் “சோர்பா என்ற கிரேக்கன்”. தமிழில் கோ.கமலக்கண்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிறுமலையில் நிகழ்ந்த நண்பர்களுடனான இலக்கியக் கூடுகையின் போது தீவிர வாசகரும், ஆங்கில ஆசிரியருமான திரு.ராஜசேகர் அவர்கள் மூலம் “சோர்பா என்ற கிரேக்கன்”என்ற இந்நாவல் அறிமுகமானது. மொழிபெயர்ப்பு நூல்கள் மீது தமிழிலக்கிய வாசகர்களுக்குப் பொதுவான ஒவ்வாமை நிலவி வருவதாகத் தனது மொழிபெயர்ப்பாளர் உரையில் கோ.கமலக்கண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். என்னளவில் இக்கருத்திலிருந்து சற்று முரண்பட விழைகிறேன். எனக்குத் தமிழைத் தவ...
Recent posts

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_21

"ரச விகாரம்" என்ற சிறுகதையில், “கதவைத் திறடா, அயோக்கியப் பயலே” என்று ஒரு தடவை உரத்துக் கூவியதோடு நிறுத்திக் கொண்டார். ஒழுக்கக் குறைவைவிட ஒழுக்கக்குறைவின் பகிரங்கமே மனிதனுக்கு எமன் என்ற ரகசியம் பட்டென்னு நெஞ்சில் பட்டது.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_20

"மீனா" என்ற சிறுகதையில், அபூர்வமான தன் இசை ஞானத்தைக் காட்ட அந்தப் பெண் அந்த ஒரு ராகத்தை ஆலாபனை செய்ததே போதும். ஆனால், இயற்கை தன் வனப்பைக் காட்ட தாமரைப்பூ ஒன்று மட்டுமே போதும் என்று திருப்தி அடைந்தது உண்டா?

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_19

"ஏமாற்றம்" என்ற சிறுகதையில், லக்ஷ்மி! உண்மையில் அன்புக்கு எதிர்காலம் என்றும் கடந்த காலம் என்றும் காலவேறுபாடுகள் கிடையாதுதான்! இங்கே, கடந்த காலத்தை நிகழ்காலமாக்குவதும் நிகழ்காலத்தை கடந்த காலமாக்குவதும் சர்வ சகஜம். எத்தனை தடவைகள் நாம், பிரிந்திருந்த நாளின் பழைய அனுபவங்களை நினைத்துப் பார்த்துப் பூரிப்பும், புளகமும் எய்தி இருக்கிறோம்? பழைய அனுபவம் நிகழ்கால சம்பவமாக அப்போது மாறிக்கொள்ளும். இதேபோல எதிர்காலத்தில், குறிப்பிட்ட நாளில் பிரிந்து செல்லவேண்டியதை நினைத்து, இரண்டு பேரும் ஓரிடத்தில் இருக்கும்போதே மனம் வருந்துவோம். இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? இந்தத் திருவிளையாடல்களின் மர்மத்தைப் புரியாமலேயே உன் பால்யப் பருவத்தின் கதைகளை இரவெல்லாம் விழித்திருந்து நாள்தோறும் கேட்பேன். அப்போது உன் பிள்ளைப் பிராயத்தில் உனக்கு ஏற்பட்ட கஷ்டங்களைக் கேட்டு வருந்துவேன். சிறு பிராயத்திலேயே நாலு பேரிடமும் நீ் ‘புத்திசாலி’ என்ற பெயர் வாங்கியதைக் கேட்டு நான் மனம் மகிழ்வேன். பிறந்ததது முதல் நீ செய்த ஒவ்வொரு செயலும் உனக்குப் பிறர் செய்த உபசரணைகளும் என்னை மதித்து எனக்காகச் செய்யும் காரியங்களாகவே தோன்றுகின்றன...

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_18

"தர்ம ராஜ்ஜியம்" என்ற சிறுகதையில், அவன் பலமுறை தன் சொந்த ஊர் ஹரிஜனக் குடியிருப்புகளில் ஊர்க்கட்டை மீறிச் சீர்திருத்தப் பிரச்சாரம் செய்ததும் உண்டு. #கு_அழகிரிசாமி_சிறுகதை18 // *யாரிடம் சீர்திருத்தப் பிரச்சாரம் செய்ய வேண்டும்? ஊரால் ஒதுக்கப்பட்ட ஹரிஜனத்திடமா? தீண்டாமை, தீட்டு எனச் சொல்லி சக மனிதர்களைப் பொதுவிலிருந்து ஒதுக்கி வைத்திருக்கும் ஊராரிடமா?* //

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_17

"விட்ட குறை" என்ற சிறுகதையில், அறிவின் எல்லை புண்ணியத்தின் எல்லை. அறிவின் எல்லை பாவத்தின் எல்லை. பாவமும், புண்ணியமும் ஒரு எல்லையில் நிற்கின்றன.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_16

"தேவையும் தெய்வமும்" என்ற சிறுகதையில், ஓர் எழுத்தாளனுக்குக் கருவிலேயே ஒட்டியிருக்கும் குணமான, சொந்தப் பத்தரிக்கை என்ற அளகாபுரி ராஜ்யத்தையும் நடத்திப் பார்க்க வேண்டுமென்ற நியாயமான ஆசை ராமகிருஷ்ண நாயுடுவைப் பிடித்த போது அவருக்குச் சரியாக வயசு இருப்பதைந்து. இரண்டொரு மாசங்களுக்குள் தாம் முதலாளியாகவும் பிரதம ஆசிரியராகவும், அமர்ந்து ஶ்ரீ ராம ஜெயம், கடவுள் வாழ்த்து முதலிய பீடிகைகளுடனர ‘கலா நேயன்’ என்ற ‘இனிய தமிழ் மாதாந்திர சஞ்சிகை’ வெளியிட்டதும், சஞ்சிகையின் எட்டாவது இதழ் வெளிவந்ததும் செட்டிமேட்டில் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச பூர்வீக ஆஸ்தியையும் பீடித்துவிட்டதும் சுமார் பதின்மூன்று வருஷங்களுக்கு முந்திய கதை.