வற்றிய வயிற்றை வார்த்தைகள் நிறைக்காது என்று நன்கறிந்தும் வயிற்றுடன் ஆறுதல் பேசினேன் இழவு வீட்டில் துக்கம் விசாரிப்பதைக் காட்டிலும் துயரமாக இருந்தது அது நீ வேறு நான் வேறா கொஞ்சம் பொறுத்துக் கொள் ஏதாவது சில்லறைகள் தேறுமா பார்க்கிறேன் போன வாரம் கழற்றிப் போட்ட மேல் சட்டை பாக்கெட்டில் ஏதாவது.? நீ தான் மேல் சட்டையில் பாக்கெட்டே வைப்பதில்லையே..! நண்பர்கள் யாராவது வந்துவிடுவார்கள் நம்பு பேசப் பேச மொத்த உடலும் வயிறாக மாறி பசியால் கதறத் தொடங்கியது ஒரு கட்டத்தில் நான் பேசுவதை நிறுத்திவிட்டேன் பின்பு என்ன நடந்ததென்று தெரியவில்லை கார்த்திக் பிரகாசம்...