சின்ன சின்ன பாராட்டிற்காக ஏங்கிப் புழுங்கும் அற்பமான மனதின் தொடர் அயற்சி தாளாமல் எடுத்த முடிவே தற்கொலை சாவதற்கு முன் கடைசியாக நீண்டதொரு கடிதம் எழுதினேன் தற்கொலை கடிதம் ஆசுவாசமாய் இருந்தது வாசித்து முடித்ததும் "என்னவொரு அழகான கையெழுத்து" என்று யாரேனும் பாராட்டுவார்கள் தானே