Skip to main content

Posts

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_35 || அன்பளிப்பு

உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்துக் கொள்ளுவதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டு உணர்ச்சியும் ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி, குழந்தையைப் போல் ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப் பொம்மையாகக் கருதி அதற்குத் தக்கவாறு நடந்து கொள்கிறார்கள்.  ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை; அவர்களுடைய பண்பில் அந்த விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள். இந்த உண்மை எனக்கு என்றோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனத்தில் தைத்தது. அன்று முதல் நான் அவர்களைக் குழந்தைகளாக நடத்தவில்லை; நண்பர்களாக நேசித்தேன். உற்ற துணைவர்களாக மதித்தேன். உள்ளன்பு என்ற அந்தஸ்தில் அவர்களும் நானும் சம உயிர்களாக மாறினோம்.  ஒரு டைரியை மேஜைமேல் வைத்தான். பேனாவை என் கையில் கொடுத்து "எழுதுங்கள்" என்றான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. "என்ன எழுத" என்று கேட்டேன்.   " 'என் பிரியமுள்ள சாரங்கனுக்கு அன்பளிப்பு' என்று எழுதுங்கள்"

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_34

"இரண்டு பெண்கள்" சிறுகதையில்,  "தன் மனம் களங்கத்தோடு இருக்கும்போது அடுத்தவனைக் குற்றம் சாட்டலாமா" என்று கேட்டேன். "களங்கமில்லையென்றால் குற்றம்சாட்டத் தோன்றாதே ஸார்!" என்றார்.  என்னிடம் ஏராளமாக இருக்கும் பத்திரிகைகளையும் புத்தகங்களையும் கண்டு பிரமித்தார். இவ்வளவு படித்திருந்தும் நான் கதை எழுதாமல் இருப்பதைக் கண்டு அதிகமாகப் பிரமித்தார். பைத்தியக்காரர்! நான் புத்தகம் படிப்பது துணைக்கு ஆளில்லாத காரணத்தினாலும் விரைவில் தூக்கம் வருவதற்காக என்பதும், கதை எழுதுவதற்கு இந்தக் காலத்தில் எவ்விதப் படிப்பும் தேவையில்லை என்பதும் அவருக்குத் தெரியாத சமாசாரங்கள். . .

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_33

"தகப்பனும் மகளும்" சிறுகதையில், "அந்தப் பயல் பார்ப்பதற்குக் கௌரவமாகத் தான் இருக்கிறான் ஸார். அவன் யோக்கியன் மாதிரி நடப்பது ஒன்றே போதும். அவன் பரம அயோக்கியன் என்பதைக் காட்ட"

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_32

"சாப்பிட்ட கடன்" சிறுகதையில், சுமார் ஐம்பதினாயிரம் பெறுமதியுள்ள சொத்துக்கு இவன் அதிபதியானதும் தன் வாழ்வில் எத்தனையோ மாறுதல்கள் நிகழ்வதைக் கண்டான். முன்னால், 'என்னப்பா, கோமதிநாயகம்!' என்றுச் சொல்லித் தோளில் கைபோட்டுப் பேசியவர்கள், இப்போது அவனை முதலாளி என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். வயது சென்ற கிழவர்கள் கூட ஏக வசனத்தில் பேசுவதை நிறுத்தி 'நீங்கள் நாங்கள்' என்று பேசினார்கள். வெற்றிலை பாக்கு கடைக்காரன் வலியக் கூப்பிட்டு ஓசி வெற்றிலைக் கொடுக்கத் தொடங்கினான். பலகார கடைக்காரனோ, இப்பொழுது கடனுக்குப் பலகாரம் கொடுப்பதுடன், கொடுத்த கடனைக் கேட்பதும் இல்லை. 'முதலாளி பணம் நம்ம பணம்; எந்த நேரத்தில் போய்க் கேட்டாலும் அட்டியில்லாமல் கிடைக்கும்' இன்று பெருமையோடு சொல்லிக் கொண்டான். கோமதி நாயகமும் தான் ஒரு முதலாளி என்ற நினைப்பை மனதுக்குள் பயிர்செய்து வளர்த்தான். அதற்குத் தக்கபடி நடந்து கொள்ளவும் ஆரம்பித்தான். முன்னாள் 'நீங்கள்' என்று யாரைப் பார்த்துச் சொல்லுவானோ அவர்களை இப்போது 'நீர்' என்றும் , 'நீர்' என்று சொன்னவர்களைப் பார்த்து 'நீ' என்றும...

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_31

"வெறும் நாள்" சிறுகதையில், டாக்டர் ஒரு பெரிய பணக்காரர்; தொழிலில் கெட்டிக்காரர்; பணத்தையும் கெட்டிக்காரத்தனத்தையும்விட அவருக்கு இருக்கும் செல்வாக்கு அதிகம். அவருக்கு ஏதாவது ஒன்று என்றால் ஊரே திரண்டு வந்துவிடும். பல பணக்காரர் வீடுகளின் அந்தரங்கங்கள் தொழில் முறையில் டாக்டருக்குத் தெரிந்திருந்தன. இதனால் அந்தரங்கம் அவருடைய மனத்தை விட்டு வெளியே போகாமல் இருக்க, பல நாமரூபங்களில் அவ்வப்போது சன்மானங்களும் செய்வார்கள் பணக்காரர்கள். தேவைக்கு அதிகமான மரியாதையும் காட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களும், பணக்காரர்களும் மரியாதை காட்டக்கூடிய ஒரு மனிதனுக்கு, மற்ற ஜனங்களிடத்தில் தானாகவே மரியாதையும் செல்வாக்கும் ஏற்படாமல் வேறு என்ன செய்யும்?

லண்டனில் சிலுவைராஜ் | ராஜ் கௌதமன்

உலகத்தில் தாங்களே உயர்ந்த நாகரிகம் மிக்கவர்கள் என்பது அந்த நாடுகளைச் சேர்ந்த வெள்ளையர்களின் நம்பிக்கை. அதை மறுப்பதற்குச் சிலுவை தயாராக இல்லை. அவர்களுக்கிடையே ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றுக்கிடையில் தனிமனிதர்களின் வசதியையும் சுதந்திரத்தையும் நாகரீகமான முறையில் வளர்த்துக் கொள்ளுகிறார்கள். ஒவ்வொருவனும் இங்கே தன்னுடைய சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கவும் மாட்டான்; பிறத்தியானுடைய சுதந்திரத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்கவும் மாட்டான். இந்தியாவில் இது தலைகீழ் விகிதத்தில் இருக்கிறது. அங்கே ஒருவன் தன்னுடைய சுதந்திரத்தை விட்டுக் கொடுப்பது தியாகம்; விட்டுக் கொடுக்காதது சுயநலம். இந்த தியாகம், சுயநலம் என்ற இரண்டு ஆயுதங்களால் யாருடைய சுதந்திரத்திலும் யாரும் தலையிடலாம்; தாக்கலாம்; நெருக்கடி செய்யலாம்; தீர்ப்புக் கூறலாம். தண்டனை வழங்கலாம். சிலுவையின் இத்தகைய சிந்தனைகளை இந்தியாவில் யாரும் அறிய நேர்ந்தால் அவனுக்கு நாட்டுப் பற்று இல்லை; இக்கரைக்கு அக்கரை பச்சை என்று அலைகிறான்; இந்திய பண்பாட்டையும் நாகரிகத்தையும் சரியாக அறியாத கபோதி; நமது முன்னோர்கள் என்ன முட்டாள்களா? லௌகீக நாகரிகத்தை வெறுத்து இந்திய...

லண்டனில் சிலுவைராஜ் | ராஜ் கௌதமன்

சாதி சாதியாகப் பிரித்துவிட்டு, ஒவ்வொருவனும் தன்னை மட்டும், தன் குடும்பத்தை மட்டும், தன் சாதியை மட்டும், தன் பிராந்தியத்தை மட்டும் கவனிக்கிற ஒரு மனநிலை நிலவுகிற பிரதேசத்தில் நாடு என்கிற ஒரு நவீன மனப்பான்மை எப்படித் தோன்றும்?

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_30

"சத்தியவான்" கதையில், "சாவித்திரி! தவறு உன்மீதுதான். நீ செய்யத்தகாத காரியத்தைச் செய்துவிட்டாய். என்ன நலனை நம்பி செத்தவனைப் பிழைக்க வைத்தாய்?' செத்துப்போன புண்ணிய புருஷர்கள் உயிருடன் இருந்திருந்தால் உலகத்தில் இன்று தேனும் பாலும் ஓடாதா! என்று உலகத்தார் சொல்லும் வார்த்தைகளை நம்பி விட்டாயா? ஓடிப்போன முயல் பெரிய முயல் என்பது பழமொழிதானே ஒழிய, அது உண்மையாகாது. செத்தவனை அப்படியே நிம்மதியாக விட்டுவிடாமல், இப்படிப் பிழைக்க வைத்தால், அவன் எப்படி எல்லாம் மாறுவானோ யார் கண்டது? #கு_அழகிரிசாமி_சிறுகதைகள் // எமலோகத்திற்கே சென்று சண்டை போட்டு எமன் பிடுங்கிச் சென்ற தனது கணவனான சத்தியவானின் உயிரைப் போராடி மீட்டு வருகிறாள் சாவித்திரி. சாவித்திரியால் உயிர் பிழைத்த சத்தியவான், அவளைத் தெய்வமாகப் பூஜிக்கத் தயாராக இருக்கிறான். ஆனால் அவளை மனைவியாக ஏற்கவோ மறுக்கிறான். அவன் உயிர் பிரிந்த கணமே அவள் விதவையாகி விட்டாள். செத்தவன் பிழைத்தாலும், வைதவ்யம் போய்விடுமா? எனச் சத்திரியத் தர்மத்தையும், ஆசாரத்தையும் தன்னைப் போல் கடைப்பிடித்த சத்திரியன் எவனுமே இல்லை என திருப்தியுறுகிறான். ஆசாரம், சத்திரியம் ...

காலச்சுமை | ராஜ் கௌதமன்

மனித விடுதலை, மனித மாண்பு… இப்பிடியான இலட்சியங்களுக்காகத் தொடங்கப்பட்ட புரட்சிகர எத்தனிப்புகள் அதிகாரத்துக்கு வந்த பிறகு மனிதர்களையே அழித்தொழிக்கத் தொடங்கிவிட்டன. காலச்சுமை | ராஜ் கௌதமன்

காலச்சுமை | ராஜ் கௌதமன்

படித்து முன்னுக்கு வந்த ஒவ்வொரு எஸ்.ஸிக்கும் ஒவ்வொரு விதமான நெருக்கடியும் தற்காப்பு உணர்வும் இலட்சியமும் இருந்தன. அவரவர் பிறந்து வளர்ந்த குடும்பச்சூழல், படிப்பு, வசதி, நோக்கு, வாழ்க்கை பற்றிய அபிப்ராயம், அனுபவித்த சாதி் வகைப்பட்ட அழுத்தங்கள், அவமானங்கள், உறவுகள், கிடைத்த வாய்ப்புகள்… இப்படி பலதரப்பட்ட காரணங்களால் ஒவ்வொரு எஸ்.ஸியும் உருவாக்கப்பட்டு வருகிறான். புதிதாக அமைந்து வரும் வாழ்க்கை முறையில் ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறான் என்பதில் மேற்படி தீர்மானிப்புகள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி ஒவ்வொருவரிடமும் பலமாதிரி சிக்கல்களை உண்டுபண்ணுகின்றன. தான் ஒரு எஸ்.ஸி என்ற நிதர்சனம் அவனைப் பல்வேறு சமாளிப்புகளுக்கு இயல்பாகவே இட்டுச் செல்கிறது. அந்த ஒரு எதார்த்தத்தை விட்டு ஓடவோ, எதிர்கொள்ளவோ, சமரசம் செய்துகொள்ளவோ, அதனை மறைக்கவோ, மாற்றவோ, போராடவோ அன்னியபடவோ அந்த இடத்தில் ஒரு பொய்யை இட்டு நிரப்பவோ, வேறோரு முகமூடியை அணியவோ, மற்றவர்க்குரிய எதார்த்தத்தை தனது லட்சியமாக வளைக்கவோ, தனக்குச் சாதகமான பிம்பங்களை வடிவமைத்துக் கொள்ளவோ ஒவ்வொரு எஸ்.ஸியும் படாத பாடுபடுகின்றான். பொதுவாக எ...

கு_அழகிரிசாமி சிறுகதைகள்_29

"ராஜா வந்திருக்கிறார்" சிறுகதையில், "தம்பி, சொன்னாக் கேளுடா... ராஜா எழுந்து வந்து மனையில் உட்கார்ந்தான். "அது தான் நல்ல பிள்ளைக்கு அடையாளம். ஒரு பிள்ளைக்குத் தேச்சி, ஒரு பிள்ளைக்குத் தேய்க்காமல் விடலாமா.? என் பிள்ளை குட்டியும் நல்ல இருக்கணுமில்லப்பா..! என்று மற்றவர்களுக்குச் சொல்லுவதுபோலத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டே எண்ணெய் தேய்த்தாள். "தாயில்லாக் குழந்தைன்னா இந்தக் கோலம்தான். நான் மூணாம் வருசம் காய்ச்சலோட படுத்திருந்தேனே, அப்போ கண்ணை மூடியிருந்தா என் குழந்தைகளுக்கும் இதே கதித் தானே ? அதுகளும் தெருவில்தானே நிண்ணிருக்கும்" - இப்படி என்னென்னவோ மனதுக்குள் நினைத்துக்கொண்டு அவசர அவசரமாகக் குழந்தைகளைக் குளிப்பாட்டினாள்.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_28

"உலகம் யாருக்கு?" சிறுகதையில், “எல்லாரும் அப்படித்தானே இருக்கிறார்கள்! உலகம் தனக்காகத்தான் இருக்கிறது என்று எவன்தான் நினைக்கவில்லை?”

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_27

"17ம் நம்பர் வீட்டு நாய்" சிறுகதையில், தன்னுடைய சுதந்திர வாழ்க்கையை நினைக்க நினைக்க அதற்குப் பேரானந்தமாக இருந்தது. குரைக்கும் சுதந்திரம் இருக்கிறது என்பதை மறுபடியும் ஞாபகப்படுத்திக் கொள்வதற்காகத் தெருவெல்லாம் குரைத்துக் கொண்டே ஓடிவந்தது. தெருவோடு வந்த பையன் ஒருவன் நாய் குரைப்பதைப் பார்த்து பயந்து விட்டான். தன்னைக் கடிக்கத்தான் வருகிறது என்று நினைத்து ஒரு கல்லை எடுத்து நாயின்மேல் எறிந்தான். எறிந்த கல் நாயின்மேல் விழுவதற்கு முன்பாகவே கம்பியை நீட்டிவிட்டான். ஒரு கால் ஒடிந்து போய்விட்டது. சுற்றும்முற்றும் பையனைக் காணாததால், பலமாகக் குரைத்துக்கொண்டே 17ஆம் நம்பர் வீட்டுக்குள் நுழைந்தது நாய்.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_26

"ஓட்டப் பந்தயம்" என்ற சிறுகதையில், அவன் நட்புக்கு எதைச் செய்தாலும் போதுமா? மேல்நாட்டில், பெலிக்கன் என்ற ஒரு பறவை தன் மார்பைக் குத்திக் குத்தி அதி்லிருந்த ரத்தத்தை எடுத்து குஞ்சுகளுக்கு உணவாக ஊட்டுமாம். அதுகூடப் பெரிய காரியமில்லை. நோய்வாய்ப்பட்ட என் ‘ஹூமாயூ’னுக்கு இந்த ‘பாபர்’ தன் எதிர்கால வாழ்வின் வெற்றி, ஆனந்தம் எதையும் தியாகம் செய்யத் தயாராக இருந்தேன்.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_25

“தவப்பயன்” என்ற சிறுகதையில், இன்னும் ‘நான்’ நசியவில்லை. ‘அவன்’ இன்னும் அவனாகத்தான் இருக்கிறான். ‘அவன்’, ‘நான்’ ஆகவில்லை. ‘நான்’, ‘அவன்’ ஆகவில்லை. கேவலம் தூலசரீரத்தைக் களைந்துவிட்டால் ஈஸ்வர ஐக்கியம் கிட்டிவிடுமா?

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_24

“திரபுரம்” என்ற சிறுகதையில்… பஞ்சம் வந்துவிட்டது. பஞ்சம் வந்துவிட்டால் என்ன? மக்கள் பட்டினி கிடப்பதோடு மட்டுமில்லாமல் மற்றொரு பரிதாபகரமான காரியத்தையும் செய்வார்கள். அதாவது, ஓர் பஞ்சப் பிரதேசத்தைவிட்டு அதைவிடக் கொடுமையான மற்றொரு பஞ்சப் பிரதேசத்திற்குக் குடிபெயர்ந்து செல்லுவார்கள். தென்கோடியில் ஏதோ குபேரபட்டணம் இருப்பதாக அவர்களுடைய நினைப்பு. பட்டினிப் பட்டாளங்கள் ஏதோ நம்பிக்கையுடன் ஒரே சாலையில் எதிர் எதிர் திசையில் பிரயாணம் செய்வது பஞ்சத்தின் கோரமான அலைக்கழிவுகளில் ஒன்று. கணவன் பட்டினியினால் செத்தான். ஆனால் காலராவில் செத்தான் என்று மானத்துக்கு அஞ்சி பொய் சொன்னாள்.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_23

“சிரிக்கவில்லை” என்ற சிறுகதையில்… சோம்பேறித்தனம் அவனுக்கு ஒரு சுகபோகம். அதிலும் இப்போது ரயில்வேயில் வேலையான்ன பிறகு, ஒருவாரம் ராத்திரி வேலையும்,ஒருவாரம் பகல் வேலையுமாகப் போய்விட்டதனால், ராத்திரி வேலை நாட்களில் பகலெல்லாம் உறங்குவான். பகல்வேலை நாட்களிலோ இரவில் உறங்குவதோடு நின்றுவிடுவது கிடையாது. பகலிலும் தூக்கம் வரும். எப்படிப்பட்ட காரியத்துக்குச சந்தர்ப்பம் கிடைத்தாலும், அந்தச் சந்தர்ப்பத்தைத் தூங்குவதற்குத்தான் பயன்படுத்துவான். பகலிலும் இரவிலும் கண்கள் சொருகிப்போய் ஒரு மயக்க நிலையிலேயே இருக்கும். அப்படி இருப்பதில் ஒரு கவர்ச்சி இருக்கும். சிலர் எப்படி இருந்தபோதிலும்கூட கவர்ச்சி மட்டும் அவர்களை விட்டுப் போகாமலே இருந்துவிடுகிறது அல்லவா?

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_22

“காடாறு மாதம்” என்ற கதையில், ஒரு சிந்தனைக்கும் அதை அடுத்துக் காரணமின்றி பிறக்கும் மற்றொரு சிந்தனைக்கும் உள்ள ஒற்றுமை, கறுப்புக்கும் வெள்ளைக்கும் உ‌ள்ள ஒற்றுமைதான். அந்த இரண்டு சிந்தனைகளில் முக்கியத்துவம் நிறைந்த சிந்தனைகள் இரண்டு. ஒன்று: ஒரு தடவையாவது பிராந்தி குடித்துப் பார்ப்போமா? இரண்டு: யாராவது ஒரு மலையாளப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டால் என்ன?

சிலுவைராஜ் சரித்திரம்

எழுதியவர்: ராஜ் கௌதமன் வகைமை: நாவல் [தன்வரலாறு] வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ராஜ் கௌதமனின் தன்வரலாற்று நாவல் ‘சிலுவைராஜ் சரித்திரம்’. தலித் சமூகத்தில் பிறந்து வளர்ந்த சிலுவை என்ற தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கையை மைய களமாகக் கொண்டு தொடங்குகிறது. அதனூடாக ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்து இரண்டு முதல் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளின் நடுப்பகுதி வரையிலான காலக்கட்டத்தில் பின்பற்றி வந்த பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை, அரங்கேறிய அரசியல் நிகழ்வுகளை, சாதிய ஒடுக்குமுறைகளைச் சாமான்யனின் குரலில் தீர்க்கமாகப் பதிவுச் செய்கின்றது இந்நாவல். என்னுடைய வாசிப்பனுபவத்தில் இந்தளவிற்குக் கிண்டலும், கேலியும் புரையோடிக் கிடக்கும் தன்வரலாற்று நாவலை இதுவரையில் நான் வாசித்ததில்லை. ஒவ்வொரு பத்தியிலும், குறைந்தபட்சம் ஒவ்வொரு பக்கத்திலும் ஏதேனும் ஒரு வரி கண்டிப்பாகச் சிரிக்க வைத்துவிடும். அதற்குக் காரணம் ராஜ் கௌதமனின் எளிமையானதும், வசீகரமானதுமான எழுத்து நடையும், கதை கூறல் உத்தியுமே ஆகும். அவருடைய நிஜ இயல்புமே அவ்வாறாகத்தான் இருந்திருக்கிறது என்பதை நாவலின் போக்கில் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. தங்களுக்கா...

சிலுவைராஜ் சரித்திரம் | ராஜ் கௌதமன்

தமிழில் இலக்கியத் திறனாய்வு செய்வதற்குமுன், இலக்கிய ஆசிரியனின் சாதி, மதம், பாத்துப் பண்ணவேண்டும் என்ற அரிச்சுவடியைக் கத்துகிறாததால வந்த வினை! சாதி, மதம், இனம் முதலான அக்கப்போர்களை விட்டுவிட்டு, விமர்சனமானது இலக்கியத்தகுதி, தரத்தையே முக்கியமாகக் கொள்ள வேண்டும் என்றும், அது அறிவியலுக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்றும் இரண்டுவிதமான விமர்சனப் போக்குகள் முன்னணிக்கு வந்து கொண்டிருந்தன. இலக்கியத்தை மட்டும் வைத்துக் கொண்டு தரம், தரம் இன்மை பார்ப்பது கலை கலைக்காக என்றும், இலக்கியம் உருவான வரலாற்றுச் சந்தர்ப்பங்களையும், இதன் சமூகப் பயன்பாட்டையும் பார்ப்பது கலை மக்களுக்காக என்றும் விளக்கம் சொன்னார்கள். கலை கலைக்காக என்ற பிரிவுக்கு முதலாளித்துவ அரசியலையும், கலை மக்களுக்காக என்ற பிரிவுக்கு சோசலிச அரசியலையும், சோசலிச எதார்த்த வாதத்தையும் ஆதாரமாகக் கருதினார்கள். இவற்றைச் சுருக்கமாக பிற்போக்கு, முற்போக்கு என்று அழைத்தார்கள். இதிலே யார் முற்போக்கு பிற்போக்கு என்பதில் சண்டை வராமலா இருக்கும்? சிலுவைக்கு ரெண்டும் ஓரளவுக்குத் தெரியும். இருந்தாலும் கலை மக்களுக்காக என்கிற அணிதான் தன்னைப் போன்ற சாமான்...