எழுதியவர்: இமையம் வகைமை: நாவல் வெளியீடு: க்ரியா மருத்துவமனையில் ஆறு மாத காலம் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் படுத்துக் கிடந்ததைப் போன்ற கனமான உணர்வு. கார்த்திக் பிரகாசம்
எழுதியவர்: அழகிய பெரியவன் வகைமை: நாவல் வெளியீடு: நீலம் பதிப்பகம் கேள்வி கேட்டால் அதிகார அமைப்பிற்கு அறவே பிடிப்பதில்லை. அதிலும் நிரந்த வருமானமும், நிலையான வாழ்வாதாரமுமின்றி அன்றாடத்தின் பொழுது நிச்சயமற்ற பொருளாதார சூழல் ஈனும் குண்டூசி அளவிலான கரிசனத்தினால் இன்னும் உயிரோடு உலவிக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட பாமரன் கேட்டால்? அவ்வாறு கேள்வி கேட்கப்படுவதை, தம் அடிப்படை கட்டமைவின் விறைப்புத் தன்மைக்கு நேர்ந்த கடும் அவமானமாகக் கருதுகின்றது அதிகார அமைப்பு. மேலும் குறிப்பிட்ட ஒரு அமைப்பின் கிளை அதிகாரம் கேள்விக்குள்ளாகும் போது, நியாய தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டு ஒரே மரத்தின் பல கிளைகளாய் விற்றிருக்கும் இதர அதிகாரங்களும் ஒன்றிணைந்து அதிகாரத்தின் குரலாய் கூட்டுச் சேர்ந்து "உனக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா?" என்ற ஒருவிதமான அருவருப்புத் தன்மையோடு சாமானியனின் கழுத்தை நெரிக்கின்றன. இதன் மறைமுக தொனி, “நீயெல்லாம் எங்கள கேள்வி கேக்குற அளவுக்கு தெகிரியம் வந்துடுச்சா” என்பதே. பொது சமுகத்தில் அதிகாரத்திற்கென்று கட்டமைக்கப்பட்டிருக்கும் பவிசு விளைவிக்கும் எரிச்சலே, நீ எப்படி என்னைப் பார்த்து கேள...