"ஏமாற்றம்" என்ற சிறுகதையில்,
லக்ஷ்மி! உண்மையில் அன்புக்கு எதிர்காலம் என்றும் கடந்த காலம் என்றும் காலவேறுபாடுகள் கிடையாதுதான்! இங்கே, கடந்த காலத்தை நிகழ்காலமாக்குவதும் நிகழ்காலத்தை கடந்த காலமாக்குவதும் சர்வ சகஜம். எத்தனை தடவைகள் நாம், பிரிந்திருந்த நாளின் பழைய அனுபவங்களை நினைத்துப் பார்த்துப் பூரிப்பும், புளகமும் எய்தி இருக்கிறோம்? பழைய அனுபவம் நிகழ்கால சம்பவமாக அப்போது மாறிக்கொள்ளும். இதேபோல எதிர்காலத்தில், குறிப்பிட்ட நாளில் பிரிந்து செல்லவேண்டியதை நினைத்து, இரண்டு பேரும் ஓரிடத்தில் இருக்கும்போதே மனம் வருந்துவோம். இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? இந்தத் திருவிளையாடல்களின் மர்மத்தைப் புரியாமலேயே உன் பால்யப் பருவத்தின் கதைகளை இரவெல்லாம் விழித்திருந்து நாள்தோறும் கேட்பேன். அப்போது உன் பிள்ளைப் பிராயத்தில் உனக்கு ஏற்பட்ட கஷ்டங்களைக் கேட்டு வருந்துவேன். சிறு பிராயத்திலேயே நாலு பேரிடமும் நீ் ‘புத்திசாலி’ என்ற பெயர் வாங்கியதைக் கேட்டு நான் மனம் மகிழ்வேன். பிறந்ததது முதல் நீ செய்த ஒவ்வொரு செயலும் உனக்குப் பிறர் செய்த உபசரணைகளும் என்னை மதித்து எனக்காகச் செய்யும் காரியங்களாகவே தோன்றுகின்றன. எனக்குத் தெரிந்த நாளிலும், தெரியாத நாளிலும் உன் வாழ்க்கையிலும் நிகழ்ந்த ருசிகரமான செய்திகளை எல்லாம் ஏதோ ஓர் அதிசயமான சக்தி திரட்டிக் கொண்டு வந்து என்னிடத்தில் ஒப்படைத்து, அவற்றை எனர உடைமைகளாக்கிக் கொண்டிருக்கும் போது, அதற்கு ஒரு மறுப்பைப் போல, ஆரம்பத்தில் ‘பாசாங்கு’ பண்ணியதாக நீ சொன்னாய். எனக்கு அது ஏமாற்றம் அளிக்காதா என்ன? உண்மையில் நாம் சந்தித்தது ஒரு சில வருஷங்களுக்கு முன்புதான் எனரறாலும், நாம் குழந்தைப் பருவத்தில் தவழ்ந்த திண்ணையையும் உறங்கிய தொட்டிலையும்கூட இப்போது ஒன்றாக்கிவிட்டோம் அல்லவா?
Comments
Post a Comment