நம் சமூகத்தில் மனிதாபிமானம் குறைந்து வருவதற்கான அடையாளம் தான் முதியோர் இல்லங்களின் அதிகரிப்பு. பத்து மாதம் கருவில் சுமந்து இருபது முப்பது வருடம் தோளில் சுமந்த பெற்றோருக்கு கடைசி காலத்தில் கொடுக்கக்கூடிய பரிசு “முதியோர் இல்லம்” தானா..?? சமிபத்தில் நான் சேலத்தில் இருந்து சென்னைக்கு இரயிலில் திரும்பிய போது ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சி. 65 வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டி நான் ஏறிய அதே பெட்டியில் ஏறினார். வெகு நேரம் மிக அமைதியாகவே வந்து கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவருடைய கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் உருண்டோடின. அருகில் இருந்தவர்கள் மௌனம் காக்க அந்த பாட்டியே தனது நிலையை விளக்க ஆரம்பித்தார். தன் மகள் வீட்டிலிருந்த அவர் கூலி வேலைக்குச் செல்பவர். அந்த பணத்தையும் மகளிடம் தான் கொடுப்பார். கடைசி ஓரிரண்டு வாரமாக உடல்நிலை சரி இல்லாததால் வேலைக்குச் செல்லவில்லையாம். இதனால் ஏசிய மகள் வார்த்தைகளை சகித்துக் கொண்டிருந்த அவர் உச்சக்கட்டமாக அந்த மகள் அடிக்க கை ஓங்க மனம் தாங்காத தாய் உள்ளம் அந்த தள்ளாத வயதில் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார் அதுவும் கையில் வெறும் 100 ரூபாயை வைத்துக் கொண்டு. இதை அவர் ச...