Skip to main content

Posts

Showing posts from March, 2014
தன்னை இழந்து பிறருக்கு ஒளியுட்டுகிறேன் என்று மெழுகுவர்த்தி பெருமைப்பட முடியாது ஏனென்றால் அது படைக்கப்பட்டதே அதற்காகத் தான். அதே போல நாம் நம்மை ஈன்று வளர்த்த பெற்றோரைப் பேணிக் காப்பது நம் கௌரவமோ பெருமையோ இல்லை. நம் உயிரை ஈன்றாவது நம்மை ஈன்றோர் உயிரைக் காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமை. கார்த்திக் பிரகாசம்..

பணம்

    என்ன செய்கிறோம் எதற்காக செய்கிறோம் என்பதை மறக்க வைக்கும் போதை.சொந்த பந்தங்களையும் உறவு முறைகளையும் தூக்கி ஏறிய துணிய வைக்கும் சகுனி. பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனை ஆட்டி வைக்கும் மந்திரம். வாழ்வதற்கு பணம் வேண்டும் என்ற காலம் போய் வாழ்வதே பணத்திற்குத் தான் என்ற காலம் வந்துவிட்டது.    சமீபத்தில் படித்த ஒரு நிகழ்வு பணத்தின் மீதான கோபத்தை இன்னும்  அதிகபடுத்தியது.     நடுத்தர வயதுள்ள ஒரு நபர் கையில் ஆறு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனை தூக்கிக் கொண்டு பேருந்தில் ஏறினார். மிகுந்த தடுமாற்றத்துடன் ஏறிய அவரை நோக்கி பேருந்து நடத்துனர் டிக்கெட் டிக்கெட் என்று கத்திக் கொண்டே வந்தார். ஆனால் அந்த நபர் எந்த ஒரு அசைவும் இல்லாமல் எதுவும் பதில் அளிக்காமல் இருந்தார். இது அந்த பேருந்து நடத்துனரை எரிச்சல் அடைய செய்தது.கோபத்துடன் "யோவ் டிக்கெட் என்றார்". நினைவு திரும்பிய அவர் தன் சட்டைப்பையில் ஒளிந்துருந்த ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார்.     யாருடனும் எதும் பேசாமல் அமைதியாக வந்து கொண்டிருந்த அவர் ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்றார். அவர...