என்ன செய்கிறோம் எதற்காக செய்கிறோம் என்பதை மறக்க வைக்கும் போதை.சொந்த பந்தங்களையும் உறவு முறைகளையும் தூக்கி ஏறிய துணிய வைக்கும் சகுனி. பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனை ஆட்டி வைக்கும் மந்திரம். வாழ்வதற்கு பணம் வேண்டும் என்ற காலம் போய் வாழ்வதே பணத்திற்குத் தான் என்ற காலம் வந்துவிட்டது.
சமீபத்தில் படித்த ஒரு நிகழ்வு பணத்தின் மீதான கோபத்தை இன்னும் அதிகபடுத்தியது.
நடுத்தர வயதுள்ள ஒரு நபர் கையில் ஆறு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனை தூக்கிக் கொண்டு பேருந்தில் ஏறினார். மிகுந்த தடுமாற்றத்துடன் ஏறிய அவரை நோக்கி பேருந்து நடத்துனர் டிக்கெட் டிக்கெட் என்று கத்திக் கொண்டே வந்தார். ஆனால் அந்த நபர் எந்த ஒரு அசைவும் இல்லாமல் எதுவும் பதில் அளிக்காமல் இருந்தார். இது அந்த பேருந்து நடத்துனரை எரிச்சல் அடைய செய்தது.கோபத்துடன் "யோவ் டிக்கெட் என்றார்". நினைவு திரும்பிய அவர் தன் சட்டைப்பையில் ஒளிந்துருந்த ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார்.
யாருடனும் எதும் பேசாமல் அமைதியாக வந்து கொண்டிருந்த அவர் ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்றார். அவரை பின் தொடர்ந்தால் அவர் சென்ற இடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் எதிரில் தெரிந்தது "சுடுகாடு". அங்கு அவர் தன் தோளில் தாங்கி இருந்த சிறுவனை தரையில் இட்டு கதறி அழுதார். அந்த சிறுவன் அவரின் மகன்.
தன் மகனின் இறுதி சடங்கிற்குக் கூட கையில் பணம் இல்லாமல் அனைவரும் செல்லும் பேருந்தில் யாருக்கும் தெரியாமல் மனதில் பயத்துடனும் தன் மகனை இழந்த வேதனையுடனும் அவருடைய அந்த நொடிகள் எப்படி சென்றிருக்கும் என்று நினைக்கும் போதே கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.. அந்த அளவுக்கு பணம் அவரிடம் கஞ்சமாக இருந்துள்ளது என்று என்னும் போது பணத்தின் மீதான கோபம் இன்னும் ஆக்கிரமிக்கிறது மனதை...
கார்த்திக் பிரகாசம்..
மனது மிகுந்த வேதனை அடைகிறது ....... உண்மைதான் பணம் என்ற ஒன்று மனிதனை தன்னிலை மறக்க செய்கிறது .... எனக்கு என்ன சொலுவது என்று தெரியவில்லை ... சிறுவனகு ஆழ்ந்த அனுதாபங்கள் ....
ReplyDelete