நம்மை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் அச்சாணி. சாமானியன் முதல் சக்கரவர்த்தி வரை அனைவரையும் எந்த நிலைக்கு வேண்டுமானாலும் ஆயுத்தப்படுத்தும் ஆயுதம். பட்டினியில் இருப்பவனுக்குக் கூட பஞ்சம் இல்லாமல் கிடைக்கும் ஒரே விஷயம் "ஆசை" மட்டும் தான். அத்தகைய நம் ஆசையை நமக்குள் மட்டும் வைத்துக் கொண்டால் எந்த பிரச்னையும் இல்லை. அதை நாம் சம்பந்தப்பட்டவர்களிடம் திணிக்கும் போது தேவையற்ற விரக்தி வெறுப்பு மற்றும் ஏமாற்றம் தான் மிச்சம். இதற்கு ஒரு சிறு உதாரணம் இன்றைய "தி ஹிந்து" நாளிதழில் "ஆளுக்கொரு ஆசை" என்ற தலைப்பில் வெளியான சிறுக்கதை.. திருமணம் முடிந்த தினம் இரவு மணப்பெண்ணை அவளுடைய தோழிகள் முதலிரவுக்காக அலங்காரம் செய்து தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர். மணப்பெண்ணும் முதலிரவு பற்றிய பதற்றத்துடனும் அதை விட அதிதமான ஆர்வத்துடனும் காத்திருந்தாள். ஒரு சில நிமிடங்களில் மாமியார் வந்து தன் மருமகளிடம் ""இந்த வீட்டில் குழந்தை சத்தம் கேட்டு ரொம்ப வருஷம் ஆச்சு. அதனால எண்ணி பத்து மாசத்துல என் கையில ஒரு பேரனையோ பேத்தியையோ பெத்து கொடுத்து விடு"" என்று அ...