Skip to main content

ஆசை

   நம்மை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் அச்சாணி. சாமானியன் முதல் சக்கரவர்த்தி வரை அனைவரையும்  எந்த நிலைக்கு வேண்டுமானாலும் ஆயுத்தப்படுத்தும் ஆயுதம். பட்டினியில் இருப்பவனுக்குக் கூட பஞ்சம் இல்லாமல் கிடைக்கும் ஒரே விஷயம் "ஆசை" மட்டும் தான்.

   அத்தகைய நம் ஆசையை  நமக்குள் மட்டும் வைத்துக் கொண்டால் எந்த பிரச்னையும் இல்லை. அதை நாம் சம்பந்தப்பட்டவர்களிடம் திணிக்கும் போது தேவையற்ற விரக்தி வெறுப்பு மற்றும் ஏமாற்றம் தான் மிச்சம்.

   இதற்கு ஒரு சிறு உதாரணம் இன்றைய "தி ஹிந்து" நாளிதழில் "ஆளுக்கொரு ஆசை" என்ற தலைப்பில் வெளியான சிறுக்கதை..

   திருமணம் முடிந்த தினம் இரவு மணப்பெண்ணை அவளுடைய தோழிகள் முதலிரவுக்காக அலங்காரம் செய்து தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர். மணப்பெண்ணும் முதலிரவு பற்றிய பதற்றத்துடனும் அதை விட அதிதமான ஆர்வத்துடனும் காத்திருந்தாள். ஒரு சில நிமிடங்களில் மாமியார் வந்து தன் மருமகளிடம் ""இந்த வீட்டில் குழந்தை சத்தம் கேட்டு ரொம்ப வருஷம் ஆச்சு. அதனால எண்ணி பத்து மாசத்துல என் கையில ஒரு பேரனையோ பேத்தியையோ பெத்து கொடுத்து விடு"" என்று அவளின்  கன்னத்தில் கிள்ளி விட்டுச் சென்றாள். அந்த மருமகளும் கன்னங்கள் சிவந்து வெட்கத்துடன் தலைக் குனிந்திருந்தால். சிறிது நேரத்தில் அந்த பெண்ணின் அம்மா பால் சொம்பினை மகளிடம் கொடுக்க வந்தார். பால் சொம்பினை மகளின் கையில் கொடுத்து விட்டு ""இதோ பாருடி செல்லம் உனக்கே தெரியும் இந்த கல்யாணத்த முடிக்க உங்கப்பா எவளோ கடன் வாங்கி இருக்காருன்னு. அதெல்லாம் கட்டி முடிக்கவே எப்படியும் இன்னும் ரெண்டு வருஷம் ஆய்டும். அதுக்குள்ள நீ உண்டாயிட்டா அதுக்கு வேற சீரு செனத்தின்னு அந்த மனுஷன் மறுபடியும் கடன் தான் வாங்கி மாட்டிக்குவாறு. அதனால அப்பாவோட கஷ்டத்த புரிஞ்சிகிட்டு குழந்தைய ஒரு வருஷம் தள்ளி போடுடி"" என்று கூறிவிட்டு பால் சொம்பினைக் கையில் கொடுத்துச் சென்றாள். அந்தப் பெண் இருவரின் ஆசைகளையும் கேட்டுவிட்டு அந்த புதுப்பெண் தன் ஆசையை மறந்து நின்றாள்.

   ஆசைப் பட அனைவருக்கும் உரிமை உள்ளது. அது நம் ஆசை அதை நாம் தான் ஆசைப்படுகிறோம். நாம் ஆசைப்பட்டது நமக்கு கிடைக்கவில்லை என்பதனாலோ அல்லது நம் ஆசை என்ற காரணத்தினாலோ அதை மற்றவர்கள் மீது திணிக்கக்கூடாது. நம்மை போல நாம் சம்பந்தப்பட்டவர்களுக்கும் அவர்களுக்கென்று தனிப்பட்ட ஆசைகள் இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும்..

கார்த்திக் பிரகாசம்...  

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...