"சர்வதேச மகளிர் தினம்" என்பது பெண்களின் பெருமைகளைப் போற்றுவதற்காக மட்டும் உருவாக்கப்பட்டது அல்ல. பெண்களின் போராட்டக் குணங்களையும், விடாமுயற்சிகளையும், ஆணினத்திற்கு எந்த விதத்திலும் சளைத்தது அல்ல இந்த பெண் இனம் என்று உலகத்திற்கு பறைசாற்றுவதற்காகவே உண்டாக்கப்பட்டது. "மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா" என்று பெண் பிறப்பின் பெருமையை போற்றி பாடினார் "கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை". ஆனால் இன்று சமூகத்தில் "ஒரு பெண்" வாழ்வதற்கு எத்தனை பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அதிகாரத்தில் இருந்தாலும் சரி, அடித்தட்டில் இருந்தாலும் சரி "பெண்" என்று வரும் போது மட்டும் இந்த சமூகம் ஒரே நேர்க்கோட்டில் ஒன்றிணைந்து விடுகிறது. அது விஷ்ணு பிரியாவிற்கும் வினு பிரியாவிற்கும் ஒரே முடிவைத் தான் அளித்திருக்கிறது. இயற்கையில் பெண்களை விட ஆண்களைப் பலமாக படைத்தது பெண்களை பாதுக்காகத்தானே தவிர பலவந்தப்படுத்த அல்ல. பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வு அளிக்கும் ஆண் சமுதாயம் அமைந்திட வேண்டும். கண்டிப்பாக அமைத்திட வேண்டும் ஆனால் அச்சமூகத்தை கட்டமைக்க...