குப்பைகள் வெளியே சிதறிக் கிடக்க, காலியாக இருந்த குப்பைத் தொட்டிக்குப் பின்னால் அவன் ஒளிந்துக் கொண்டான். வீட்டு வாசலில் யாரோ இருவர் நின்று வாய்க்கு வந்தபடி கத்திக் கொண்டிருந்தனர். அசிங்கமான வார்த்தைகள். கேட்க முடியவில்லை. குரலை உற்றுக் கவனித்த போது எட்டு மாதத்திற்கு முன்பு வட்டிக்குப் பணம் கொடுத்திருந்த கேசவனும், செல்வராஜும் என்றுத் தெரிந்தது. அவனுடைய மனைவி வாசற்படியில் படபடப்புடன் நின்றிந்தாள். "யம்மா.. மொதல்ல ஒம் புருஷன வெளிய வரச் சொல்லு" கேசவன் கத்தினான். "அவரு வீட்ல இல்லிங்க" உடைந்த குரலில் வார்த்தைகள் வந்தன. "என்னம்மா.. எப்ப வந்துக் கேட்டாலும் இதையே சொல்ற... என்ன புருஷனும், பொண்டாட்டியுமா சேர்ந்துக்கிட்டு ட்ராமா பண்றீங்களா" "இத பாரும்மா. வீட்டுக்குள்ள வந்து பண்ட பாத்திரத்தெல்லாம் தூக்கிட்டு போன அசிங்கமா போய்டுமேனு பாக்கறேன். ஒழுங்கு மரியாதையா அந்த நாதாரி பயல" பெரும்கோபம் கொண்டு வார்த்தைகளை விழுங்கினான் செல்வராஜ். அடுக்கு மாடி வீடுகளில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்தனர். அநேகமாக கரண்ட் இல்லை போலிருக்...