மழைக்கான வாய்ப்பிருப்பதாக மேகம் சொல்லும் தினமும் நம்பிக்கையான தகவலைப் பகிர்ந்திருப்பினும் காற்றுடன் உலாவி கைவிரித்த மேகங்களின் மீது ஒருபோதும் கோபம் இருந்ததில்லை மழை நனைக்காத நாட்களில் மண் எனக்கு ஆறுதல் சொல்லும் கார்த்திக் பிரகாசம்...
கசப்பற்ற ஓர் நாளை கண்டடைய யுகமாய் வேண்டுகிறாள் புனித சிறையில் அடைபட்ட தாயொருத்தி அண்டை பொற்சிறையில் அகப்பட்டிருக்கும் கடவுளால் எந்த நன்மையும் இல்லை இதுவரை கார்த்திக் பிரகாசம்...
பிறருடைய மகிழ்ச்சியில் பொதுவாக நான் கலந்து கொள்வதில்லை பொறாமையோ வக்கிர எண்ணமோவல்ல வலிந்து திணிக்கப்படுவதும் தவிர்க்க இயலாது வேறு வழியின்றி சுமந்தே ஆகக் கட்டாயமாக்கப்படும் மகிழ்ச்சியானது மனதிற்கு உவப்பானதாக இருப்பதில்லை இயல்பாக வருடாத அந்த மகிழ்வுணர்வு அழுகல் நாற்றத்தையே நெஞ்சத்தில் வீசுகிறது கார்த்திக் பிரகாசம்...