Skip to main content

Posts

பூவும் பெண்ணும்

தாயின் தாலாட்டுப் பாடலில்                  குழந்தை ஒய்யாரமாக அவள் மடியில் சிணுங்கிக் கொண்டே உறங்குவது போல பூக்களின் மடியில் காற்றின் தாலாட்டு இசையில் வண்டுகள் சௌகரியமாக உறங்கிக் கொண்டிருக்கின்றன.. பெண் இன்னோர்  உயிருக்கு(வாண்டுகளுக்கு) தாயாகி பாலூட்ட "பூ"ப்பெய்துகிறாள்..   பூக்களோ வண்டுகளுக்கு தேனூட்டி தாயாகின்றன.. பூக்களுக்குத் தாய்மைப் பண்பு இருப்பதனால் தான் எப்பொழுதும் அதை விரும்புகின்றனர் போலிருக்கிறது ""பெண்கள்"" .. தன்னைப் போன்ற தாய்மைப் பண்பு இருக்கும் பெண்ணின் கூந்தலை அடைந்தாள் அது ஓர் மோட்சம் என்பதை  உணர்ந்து தான்  தன் இறப்பைக் கூட சிரிப்புடன் விரைந்து  ஏற்றுக் கொள்கின்றன போலிருக்கிறது ""பூக்கள்"".. கார்த்திக் பிரகாசம்.. .

ஆசிரியர் தினம்..

பகலில் தெரியாத வானத்து நிலவாய் வகுப்பறையில் நாங்கள்... எங்களை முழு நிலவாய் மாற்றிய இரவாய் எங்கள் ஆசிரியர்கள் ... நற் செயல்களை கற்பித்து,கல்வி அறிவை ஊற்றெடுக்க வைத்து மற்றும் சமுதாயத்தில் ஒரு அடையாளத்தைப் பெற ஊன்றுக்கோலாக உறுதுணையாக இருந்த எங்கள் வாசவி மேல்நிலை பள்ளியின் ஆசிரியர்கள் திரு.நௌசத் கான், திரு.இரத்தின வேல், திரு. செந்தில் குமார், திரு.கிருஷ்ண மூர்த்தி, திரு. வெங்கடேசன் , திரு. செல்வ கிருஷ்ணண், திரு. லஷ்மி நாரயணண், திரு.அர்த்தநாரி, திரு.நிர்மல் குமார், திருமதி.ஜெயந்தி, திருமதி. பானுமதி, திருமதி. சித்ரா, திருமதி. ஹெலன், திருமதி. காளிகாம்பாள், திருமதி. ஷீலா, திருமதி. கனிமொழி, திரு. சுகுமார், திரு.தியாகராஜன், திருமதி. ராஜேஷ்வரி, திருமதி. காயத்ரி, திரு.பெருமாள், திரு.சுப்ரமணி, திரு.திருநாவுக்கரசு என எங்களை பெற்றெடுக்காத பெற்றோர்களான ஆசிரியர்கள் அனைவருக்கும்  ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. வாழ்த்த வயது தேவையில்லை மனது இருந்தால் போதும் .. உங்கள் பிள்ளைகள் நாங்கள் எங்களுக்கு அந்த மனதை நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள்.. எளிதில் தொடர்பு கொள்ள முடியாத  தொலைவில் இருந்தாலும...

ஆசை

   நம்மை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் அச்சாணி. சாமானியன் முதல் சக்கரவர்த்தி வரை அனைவரையும்  எந்த நிலைக்கு வேண்டுமானாலும் ஆயுத்தப்படுத்தும் ஆயுதம். பட்டினியில் இருப்பவனுக்குக் கூட பஞ்சம் இல்லாமல் கிடைக்கும் ஒரே விஷயம் "ஆசை" மட்டும் தான்.    அத்தகைய நம் ஆசையை  நமக்குள் மட்டும் வைத்துக் கொண்டால் எந்த பிரச்னையும் இல்லை. அதை நாம் சம்பந்தப்பட்டவர்களிடம் திணிக்கும் போது தேவையற்ற விரக்தி வெறுப்பு மற்றும் ஏமாற்றம் தான் மிச்சம்.    இதற்கு ஒரு சிறு உதாரணம் இன்றைய "தி ஹிந்து" நாளிதழில் "ஆளுக்கொரு ஆசை" என்ற தலைப்பில் வெளியான சிறுக்கதை..    திருமணம் முடிந்த தினம் இரவு மணப்பெண்ணை அவளுடைய தோழிகள் முதலிரவுக்காக அலங்காரம் செய்து தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர். மணப்பெண்ணும் முதலிரவு பற்றிய பதற்றத்துடனும் அதை விட அதிதமான ஆர்வத்துடனும் காத்திருந்தாள். ஒரு சில நிமிடங்களில் மாமியார் வந்து தன் மருமகளிடம் ""இந்த வீட்டில் குழந்தை சத்தம் கேட்டு ரொம்ப வருஷம் ஆச்சு. அதனால எண்ணி பத்து மாசத்துல என் கையில ஒரு பேரனையோ பேத்தியையோ பெத்து கொடுத்து விடு"" என்று அ...
ஆசை காதலுக்கும் கனவு வேலைக்கும் பெரிய ஒற்றுமை உள்ளது.. இரண்டு விஷயங்களுக்காகவும்  வெகு நாட்கள் காத்திருக்க வேண்டும். கடைசியில் கிடைத்ததை ஏற்றுக் கொண்டாக வேண்டும். கார்த்திக் பிரகாசம்.
காடுகளை அழித்து கட்டடங்கள் ஆக்கிவிட்டு காற்றுக்காக காத்திருக்கிறோம்.. கார்த்திக் பிரகாசம்.. 
படித்த படிப்புக்கான வேலைக்குத் தான் போவேன் என்று நானும் ஒரு காலத்தில் அடம் பிடித்துக் காத்துக் கொண்டிருந்தேன்.. எனது துறைச் சார்ந்த வேலைக்காக போராடினேன். எனது போராட்டம் மாதக் கணக்கில் வருட கணக்கில் நீண்டுக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் குடும்பத்துக்காக அப்பா வாங்கிய கடனும், அப்பா கஷ்டப்படும் நிலையைப் பார்த்து அம்மாவின் கண்களில் வழிந்த கண்ணீரும் என்னை ஏதோ ஒரு வேலைக்குச் செல்ல துரத்தியது. பிறகு ஒரு கம்பெனியில் வேலை. அப்பாக்கும் அம்மாக்கும் சந்தோஷம். இன்று வருடங்கள் உருண்டோடிவிட்டன. இருந்தாலும் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி கொன்று கொண்டு இருக்கிறது. கார்த்திக் பிரகாசம்..
பணம் சம்பாதிக்க பயன்படும் கருவி அல்ல கல்வி. உலகத்தை ஆள கிடைத்த ஆயுதம். கார்த்திக் பிரகாசம் ..