Skip to main content

Posts

Showing posts from October, 2013

""தாயும் மனைவியும்""

    வெகு நாட்களாக ஒரு சந்தேகம் கடவுள் ஏன் கருவறையை பெண்களுக்கு வைத்தான் என்று..! பிறகு தான் தோன்றியது கடவுள் கண்டிப்பாக ஆணாக  இருக்கக் கூடும். அதனால் தான் இந்த உயிர் பெரும் வலியை நம்மால் தாங்க இயலாது என்று பெண்களுக்கு வைத்திருப்பான். ஏனென்றால் இந்த உயிர் பெரும் வலியே சில நேரங்களில் உயிர் எடுக்கும் வழியாக மாறக்கூடும். ஆனால் பெண்கள் இந்த உயிர் ஈயும் வலியைக் கூட சுகமாகத் தான் நினைக்கின்றனர்.     தான் கருவுறும் போது  அந்த தாய் பெரும் சந்தோசத்திருக்கு அளவே இல்லை. கருவுற்ற கணம் முதலே தன் கண் மணிக்காக அந்த தாய் இழக்கும் சின்ன சின்ன விஷயங்களும் அதனால் பெரும் வலிகளும் எண்ணிலடகங்காதவை.கரு வளர வளர உடளவில் ஏற்படும் சிரமங்களால் உண்டாகும் கண்ணீரைக் கூட குழந்தைப் பெறப் போகும் நினைவுகளால் ஆனந்த கண்ணீராய் மாற்றுபவள். குழந்தைப் பெற போகும் தருணத்தில் உண்டாகும் வலிகளைக் கூட வெளியே சொல்லாமல் தன் குழந்தைக்காகத்  தானே என்று எண்ணி பெருமை அடைவாள். ஒவ்வொரு தாயும் தன் குழந்தைப் பிறவி எடுக்க அவள் தன் வாழ்வின் மறு பிறவி எடுக்கிறாள் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்று...

""வேலைத் தேடும் வேலை"'

" வேலை "-   பட்டப் படிப்பை முடித்து வரும் ஒவ்வொரு இளைஞனின் வாழ்கையில் முதல் படி. ஒவ்வொவருக்கும் "கனவு வேலை"(ட்ரிம் ஜாப்) என்று ஒன்று இருக்கும். அதைத் தேடித்தான் தனது தேடலையும் தொடங்குவார்கள். ஆனால் பெரும்பாலான இளைஞர்களுக்கு அது கனவாகத் தான் முடிகிறது. இறுதியில் கிடைக்கும் ஏதோ ஒரு வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளது குடும்பத்திற்காகவும் மற்ற பிற சூழ்நிலைகளாலும். இதனால் தான் என்னவோ அதனைக் கனவு வேலை என்று அழைத்தான் போலிருக்கிறது அந்த இளைஞன்..                         ஒவ்வொருவருக்கும் தான் செய்யும் வேலைத் தான் மிக கடினமானதாகத் தோன்றும். அது தான் நியாமும் கூட.ஆனால் மிக கடினமான மன அழுத்தம் நிறைந்த வேலை என்பது தனக்கான வேலையைத் தேடுவது தான். வேலைக்குச் செல்பவன் கூட காலையில் 9 மணிக்குத் தான் கிளம்புவான் ஆனால் வேலைத் தேடுபவன் 7 மணிக்கே கிளம்ப வேண்டியதிருக்கும். காலையில் சாப்பிடாமல் ஏதோ ஒரு டீ கடையில் ஒரு "டீ வடையுடன்" அன்றைய தேடல் தொடங்கும். ஊரின் ஏதோ ஒரு கடைக்கோடியி...