வெகு நாட்களாக ஒரு சந்தேகம் கடவுள் ஏன் கருவறையை பெண்களுக்கு வைத்தான் என்று..! பிறகு தான் தோன்றியது கடவுள் கண்டிப்பாக ஆணாக இருக்கக் கூடும். அதனால் தான் இந்த உயிர் பெரும் வலியை நம்மால் தாங்க இயலாது என்று பெண்களுக்கு வைத்திருப்பான். ஏனென்றால் இந்த உயிர் பெரும் வலியே சில நேரங்களில் உயிர் எடுக்கும் வழியாக மாறக்கூடும். ஆனால் பெண்கள் இந்த உயிர் ஈயும் வலியைக் கூட சுகமாகத் தான் நினைக்கின்றனர்.
தான் கருவுறும் போது அந்த தாய் பெரும் சந்தோசத்திருக்கு அளவே இல்லை. கருவுற்ற கணம் முதலே தன் கண் மணிக்காக அந்த தாய் இழக்கும் சின்ன சின்ன விஷயங்களும் அதனால் பெரும் வலிகளும் எண்ணிலடகங்காதவை.கரு வளர வளர உடளவில் ஏற்படும் சிரமங்களால் உண்டாகும் கண்ணீரைக் கூட குழந்தைப் பெறப் போகும் நினைவுகளால் ஆனந்த கண்ணீராய் மாற்றுபவள். குழந்தைப் பெற போகும் தருணத்தில் உண்டாகும் வலிகளைக் கூட வெளியே சொல்லாமல் தன் குழந்தைக்காகத் தானே என்று எண்ணி பெருமை அடைவாள். ஒவ்வொரு தாயும் தன் குழந்தைப் பிறவி எடுக்க அவள் தன் வாழ்வின் மறு பிறவி எடுக்கிறாள் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்று.
எங்கிருந்தோ ஒரு ஆணின் வாழ்க்கையை நிம்மதியானதாகவும் ஒளிமயமானதாக்கவும் வரும் தேவதை மனைவி. கணவனிடம் உண்மையான அன்பை தவிர வேற எதையும் எதிர்ப் பார்க்காத பெரும்பான்மை மனது உடையவள்.வாழ்வின் அணைத்துக் கட்டங்களிலும் கணவனுக்கு முதுகெலும்பாக இருப்பவள். அன்பை அள்ளித் தெளிக்கும் கொடையாளி. ஒவ்வொரு ஆணின் உண்மையான தோழி. எந்நேரமும் கணவனையும் குழந்தையையும் பற்றி மட்டுமே சிந்திக்கும் சுயநலவாதி.
இந்த உலகில் யாரை நாம் மறந்தாலும் மறவாமல் போற்றப்பட வேண்டிய இரு ஜீவன்கள் தாய் மற்றும் மனைவி. நமக்கு வாழ்கையில் பிறப்பால் மதிப்பால் அடையாளம் கொடுக்கும் இரு உயிர்கள். ஒரு தாய்ச் சொன்னால் தான் அவன் மகன் அதே போல தன் மனைவி மனது வைத்தால் தான் அவன் ஆண் மகன். இந்த இரண்டு பெண் மணிகளுக்கும் நாம் என்ன செய்தாலும் ஈடாகது. அதனால் உயிர் உள்ளவரை அவர்களுக்கு மரியாதையுடன் அன்பு செலுத்தி வணங்குவோம்.
"""என்னை சுமந்தவளுக்கும் என் உயிரை சுமப்பவளுக்கும்"""
கார்த்திக் பிரகாசம்..

Comments
Post a Comment