Skip to main content

Posts

Showing posts from November, 2013
புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றாய் ஆசை ஆசையை உன் அருகில் வந்து நின்றேன் அப்போது எனக்கு தெரியவில்லை  புகைப்படத்தில் மட்டும் தான்  நீ என்னோடு இருக்க போகிறாய் என்று...!! கார்த்திக் பிரகாசம்..

நட்பால்..

நட்பைப் பற்றிச் சொல்ல எத்தனையோ கவிதைகள் எத்தனையோ கதைகள் எத்தனையோ பாடல்கள் எத்தனையோ படங்கள் இருந்தாலும்  நட்பைப் பற்றி  பேச மனம் ஏங்கிக் கொண்டே இருக்கின்றது. பெரியப்பா  மாமா சித்தப்பா சித்தி அத்தை என அனைத்து சொந்தங்களையும் உருவாக்கிக் கொடுத்த இறைவன் தோழன் தோழியை மட்டும் உறவுகளில் ஏன் படைக்கவில்லை. ஒரு வேளை எல்லா சொந்த பந்தங்களும் என்றைக்காவுது ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்திற்க்காக நம்மை விட்டு விலகிவிடும் என்பதனால் தான் தோழன் தோழியை மட்டும் உறவுகளில் படைக்காமல் உறவுக்காக படைத்திருப்பான் போலிருக்கிறது.. பள்ளிக் கல்வியில் தொடங்கி பாடையில் போகும் வரை உயிரோடு கலந்திருக்கும் நட்பு. பள்ளி, கல்லூரி மற்றும் வேலை செய்யும் அலுவலகம் என்று நட்பு வட்டாரங்கள் மாறினாலும் நட்பு மட்டும் மாறுவதே இல்லை. புதிய நண்பனிடம் தன் பழைய நட்பைப் பற்றி பேசுவது கூட சுகம் தான்.நண்பனைக் கலாய்த்து சிரிப்பதுண்டு ஆனால் கவலையில் கலங்கி நிற்கும் போது நண்பனின் கஷ்டமான  நிலையைக் கண்டு ஒரு போதும் சிரிப்பதில்லை. தன் நண்பனின் பெற்றோரைக் கூட அம்மா அப்பா என்று அழைக்கும்  பெருந்தன்மை நட்புக்கு உண்டு. ...
எதிர்ப்பார்ப்புகளை அளந்தும் ஏமாற்றங்களை அள்ளியும் தருகிறாய்.. ஏமாற்றங்களைக் கூட எதிர்ப்பார்க்க ஆரம்பித்துவிட்டேன் அது உன்னால் ஏற்படுவதென்றால்..... கார்த்திக் பிரகாசம்..
நான் உனக்காக சிந்திய கண்ணீர்த் துளிகள் நீ என்னுடன் இருந்த நொடிகளை விட அதிகம்.. நீ மட்டும் இருந்த என் நாட்கள் இப்பொழுது  நீ இல்லாமல்..!! கார்த்திக் பிரகாசம்..
என்னை  போல நான் மட்டுமே உன் மீது அன்பு செலுத்த வேண்டும் என்று நினைப்பது சுயநலம் என்றால் நான் தான் இந்த உலகத்தில் மிகப் பெரிய சுயநலவாதி... கார்த்திக் பிரகாசம்.. 

மழை..

    இயற்கையின் அழிவில்லாச்  செல்வம். இயற்கையினால் இவ்வுலகத்திற்கு கிடைக்கப் பெற்ற கொடை. இம்மண்ணின் அழையா விருந்தாளி. சில சமயங்களில் அழைத்தாலும் வராத துரோகி. கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள் "கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிச்சிட்டுக் கொடுக்கும்" என்று.. இந்த பழமொழி எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ மழைக்கு  மிக நன்றாகவே  பொருந்தும்.      வராத போது வரவில்லையே என்று ஏங்க வைப்பதும் வந்து விட்டால் இப்படி வருகிறதே என்று குமுற வைப்பதும் மழைக்கே உரித்தான சிறப்பம்சம். மழை வரமா சாபமா என்று சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் வைக்கும் அளவிற்கு அதனுடைய பயன்பாடுகளும் ஆக்ரோஷ தாண்டவங்களும் உள்ளன.     ஒருபுறம் மழையினால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் நீரில் முழ்கின மறுபுறம் கன மழையினால் ஏரிகள் குளங்கள் நிரம்பி நீர் தேக்க அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு. ஒரே  நேரத்தில் ஏற்பட்ட இரண்டு மிகப் பெரிய விளைவுகள். இதில் ஒரு இழப்பும் மிகப் பெரிய கொடையும் இருக்கின்றன.மிகப்  பெரிய  இழப்பு தான் என்றாலும் கூட...

பிரிவு..

நிகழ்வுகள் நினைவுகளாக மாறும் தருணம்.. நிகழ்வுகளின் முடிவு..!! நினைவுகளின் தொடக்கம்..!! கார்த்திக் பிரகாசம்.. 
கனவுகளோடு வாழ்கின்றேனா                         இல்லை   கனவுகளில் மட்டும் வாழ்கின்றேனா...? தெரியவில்லை...!! புரியவில்லை...!!  கார்த்திக் பிரகாசம்..