நட்பைப் பற்றிச் சொல்ல எத்தனையோ கவிதைகள் எத்தனையோ கதைகள் எத்தனையோ பாடல்கள் எத்தனையோ படங்கள் இருந்தாலும் நட்பைப் பற்றி பேச மனம் ஏங்கிக் கொண்டே இருக்கின்றது.
பெரியப்பா மாமா சித்தப்பா சித்தி அத்தை என அனைத்து சொந்தங்களையும் உருவாக்கிக் கொடுத்த இறைவன் தோழன் தோழியை மட்டும் உறவுகளில் ஏன் படைக்கவில்லை. ஒரு வேளை எல்லா சொந்த பந்தங்களும் என்றைக்காவுது ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்திற்க்காக நம்மை விட்டு விலகிவிடும் என்பதனால் தான் தோழன் தோழியை மட்டும் உறவுகளில் படைக்காமல் உறவுக்காக படைத்திருப்பான் போலிருக்கிறது..
பள்ளிக் கல்வியில் தொடங்கி பாடையில் போகும் வரை உயிரோடு கலந்திருக்கும் நட்பு. பள்ளி, கல்லூரி மற்றும் வேலை செய்யும் அலுவலகம் என்று நட்பு வட்டாரங்கள் மாறினாலும் நட்பு மட்டும் மாறுவதே இல்லை. புதிய நண்பனிடம் தன் பழைய நட்பைப் பற்றி பேசுவது கூட சுகம் தான்.நண்பனைக் கலாய்த்து சிரிப்பதுண்டு ஆனால் கவலையில் கலங்கி நிற்கும் போது நண்பனின் கஷ்டமான நிலையைக் கண்டு ஒரு போதும் சிரிப்பதில்லை. தன் நண்பனின் பெற்றோரைக் கூட அம்மா அப்பா என்று அழைக்கும் பெருந்தன்மை நட்புக்கு உண்டு.
"தோல்வி வெற்றிக்கான படி" என்பார்கள். ஆனால் நட்பு தோல்வியின் போது நம்மை தாங்கி துணை நிற்கும் "தூண்".தாங்கி பிடிக்க தூண் இல்லாவிட்டால் வெற்றி படிக்கட்டில் கால் வைக்க முடியாது. நாம் சுவாசிக்க ஆக்ஸிஜன் வாயு தேவை. அப்பொழுது தான் நம்மால் உயிர் வாழ முடியும். ஆனால் அது நம் கண்ணுக்கு தெரிவதில்லை. அதே போல நம்மைச் சுற்றி நட்பு என்னும் ஆக்ஸிஜன் நம் கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியும் துக்கத்தில் துணை நின்றும் நம் வாழ்க்கையைத் தாங்கி பிடிக்கின்றது.
""நட்பால் உருவான சொந்தங்களுக்கு..""
கார்த்திக் பிரகாசம்..

good words about friendship now am go to think all my friends...
ReplyDeleteSuper
ReplyDelete