இயற்கையின் அழிவில்லாச் செல்வம். இயற்கையினால் இவ்வுலகத்திற்கு கிடைக்கப் பெற்ற கொடை. இம்மண்ணின் அழையா விருந்தாளி. சில சமயங்களில் அழைத்தாலும் வராத துரோகி. கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள் "கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிச்சிட்டுக் கொடுக்கும்" என்று.. இந்த பழமொழி எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ மழைக்கு மிக நன்றாகவே பொருந்தும்.
வராத போது வரவில்லையே என்று ஏங்க வைப்பதும் வந்து விட்டால் இப்படி வருகிறதே என்று குமுற வைப்பதும் மழைக்கே உரித்தான சிறப்பம்சம். மழை வரமா சாபமா என்று சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் வைக்கும் அளவிற்கு அதனுடைய பயன்பாடுகளும் ஆக்ரோஷ தாண்டவங்களும் உள்ளன.
ஒருபுறம் மழையினால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் நீரில் முழ்கின மறுபுறம் கன மழையினால் ஏரிகள் குளங்கள் நிரம்பி நீர் தேக்க அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு. ஒரே நேரத்தில் ஏற்பட்ட இரண்டு மிகப் பெரிய விளைவுகள். இதில் ஒரு இழப்பும் மிகப் பெரிய கொடையும் இருக்கின்றன.மிகப் பெரிய இழப்பு தான் என்றாலும் கூட அது குறுகிய கால பாதிப்பு.. பணத்தினால் ஈடு செய்ய முடிந்த இழப்பு ஆனால் மழை மட்டுமே நீரின் ஒரே மூலாதாரம். மழை நீரைத் தேக்கி வைப்பதனால் நாம் மட்டும் இல்லாமல் நம் பிற்கால சந்ததியனரும் பயன் பெறுவார்கள்.
ஒரு விதத்தில் அன்பும் மழையைப் போல தான். கிடைக்காத போது ஏக்கத்தையும் கிடைக்கும் போது காயங்களையும் ஏற்படுத்தும். காயப்படுத்தாமல் வலியை உண்டாக்க மழையினாலும் அன்பினாலும் மட்டுமே முடியும். மழையினால் ஒரு சாராருக்கு மகிழ்ச்சி மற்றொரு சாராருக்கு அது துன்பம். அதே போல அன்பினால் ஒருவருக்கு ஆனந்தம் மற்றவருக்கு வலி. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல அன்பும் கூட நஞ்சு தான்..
பன்முகம் கொண்ட மழை.இதில் ஏதேனும் ஒரு முகத்தை மட்டும் வைத்துக் கொண்டு மழை வரமா சாபமா என்று அலசுவது நாம் சுயநலவாதிகளாக இருப்பதன் பிம்பம். மழையின் அனைத்து முகங்களையும் இன்முகத்தோடு ஏற்போம்.
"""மழையினால் பரவசப்படும் மழைக் காதலன்"""
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment