1 கோடியே 20 லட்சம். இது அரசோ அல்லது ஏதோ ஒரு தனியார் நிறுவனமோ செய்த ஊழல் அல்ல. உயர் அதிகாரி வாங்கிய லஞ்சமும் அல்ல. இது நம் இந்திய திரு நாட்டில் உள்ள பார்வை அற்றவர்களின் எண்ணிக்கை. ஆம். 1 கோடியே 20 லட்சம். இவர்களின் வாழ்க்கை தினமும் தொடங்குவதும் முடிவதும் இருளில் தான். இவர்களுடைய அன்றாட தேடல்களும் கேள்விகளும் கேள்விக்கான பதில்களும் இருளில் தான் புதைந்து உள்ளன. வாழ்வில் வெளிச்சத்தையே உணராதவர்கள்.இருந்தும் தன்னம்பிக்கையோடு வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள். கண் எதிரே ஒருவர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது அதை கண்டுக் கொள்ளாமல் இருப்பது கூட பார்வை இல்லாததுக்கு சமம். நல்ல விதமாக அந்த ஆண்டவன் நமக்கு கண் பார்வை அளித்துள்ளான். நாம் உயிரோடு இருக்கும் வரை அதை பயன்படுத்திக் கொண்டு நம் வாழ்வு முடிந்த பிறகு மற்றவர்களுக்கு உதவுமாறு வழிவகை செய்தால் அவர்களுடைய வாழ்வும் ஒளி பெறும். நம் உயிர் உட்பட இந்த உலகில் எந்த ஒரு பொருளும் விஷயமும் நமக்கு சொந்தமானவை அல்ல. ஒரு கட்டத்தில் இந்த உயிரே...