Skip to main content

Posts

Showing posts from July, 2016
தோல்வி கொடூரமாக உரசும் போதெல்லாம் கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு பழகியதால் என்னவோ வெற்றி வந்து மென்மையாக தொடும் போதும் கண்கள் கண்ணீர்த்துளிகளால் கனத்து விடுகின்றன ஆனந்தமாக...!!! கார்த்திக் பிரகாசம்...

அவள் என்ன நிறம்...?

அவ்வளவு வெளுப்புமில்லை... அந்தளவு கருப்புமில்லை... கருப்பும் வெளுப்பும் கலவியின் முடிவில் கண்ட வெட்கத்தில் கொண்ட நிறம்...!!! கார்த்திக் பிரகாசம்...
மாற்று வழிகள் எப்பொழுதும் தயாராய் இருக்கின்றன.. ஆனால் மாற்றிக் கொள்ள தான் யாரும் தயாராக இல்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
பள்ளி முடியும் நேரமாகிவிட்டது அந்த இரு சிறுவர்களும் உற்சாகமாயினர் மூளை சுறுசுறுப்பானது மணியோசையை எதிர்பார்த்து மும்மரமாய் காத்திருந்தனர்...!!! பள்ளிக்கூட மணியோசை கேட்டது கேட்ட நொடி மட்டும்தான் தாமதம் இருவரும் வாசலை நோக்கி வேக வேகமாய் ஓடிப்போயினர்...!!! சீருடையுடன் பள்ளியை விட்டு வெளியே  வந்த  மாணவர்களிடம்  அவர்களுக்கு பிடித்த திண்பண்டங்களை விற்று பள்ளியை விட்டு வீடு திரும்பினர் அந்த சீருடையற்ற பள்ளி மாணவர்கள்...!!! கார்த்திக் பிரகாசம்...
நாம் இரண்டு பேரைப் பார்த்து கேலியாகச் சிரிக்கும் போது நம்மை நோக்கி நான்கு பேர் இளக்காரமாக சிரித்துக் கொண்டிருப்பார்கள்...!!! கார்த்திக் பிரகாசம்...

கன்னிக் கழியா இரவுகள்...!!!

வெளிச்சத்தின் வாசமே தெரியாததனால் கன்னித் தன்மை கொஞ்சமும் இழக்காமல் இரவின் வீதிகளில் இருளை மட்டும் அணிந்து வெளிச்சமென்னும் வீரன் வந்து கற்பை களவாட தெரு திறந்து காத்து கிடக்கின்றன பல கிராமத்து இரவுகள்...!!! கார்த்திக் பிரகாசம்...
ஒரு பெண்ணுக்குத் தானாக உதவ வரும் ஆணையும் ஒரு ஆணிடம் தாமாக முன்வந்து காதலைச் சொல்லும் பெண்ணையும் சமூகத்தின் சந்தேக கண்கள் சாடாமல் இருந்ததாக சான்று இல்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
கடற்கரை முழுதும் இருளில் மூழ்கத் தொடங்கியிருந்த நேரம்... மணலில் ஒருபுறம் மனிதர்களும் மறுபுறம் நாய்களும் இருளை தங்கள் இச்சைக்கு வசமாக்கி புணர்ந்து கொண்டிருந்தன... காற்றில் கலந்து வந்த கடலலை சாரல் அவர்களின் முகத்தில் காறி உமிழ்ந்து கொண்டிருந்தது... கார்த்திக் பிரகாசம்...