நிர்வாணமாய் உறங்கியதுண்டா.? முடிக்கற்றையை கோதும் காற்றிடம் நட்பு பாராட்டியதுண்டா.? புது புத்தகத்தின் வாசனையில் முகம் புதைத்ததுண்டா.? யாருமில்லா மொட்டை மாடியில் சத்தமாக புலம்பியதுண்டா.? ஒரு டம்ளர் டீயில் மொத்த வாழ்க்கைக்கும் நியாயம் கண்டதுண்டா.? மழைத்துளியைக் கட்டியணைத்ததுண்டா.? தாகத்தை மாமழைத் துளிகளில் தீர்த்ததுண்டா.? கூட்டத்தில் களவுப் போக விரும்பியதுண்டா.? இளநீர் விற்கும் தாத்தா பாட்டியிடம் நலம் விசாரித்ததுண்டா.? பிச்சையெடுப்பவனின் சோகக் கதையைக் கேட்டதுண்டா.? நகர்ந்தோடும் நாட்களைத் தடுத்து நிறுத்த எண்ணியதுண்டா.? காய்ந்துலர்ந்த இலைகளின் வாழ்க்கையைக் கவனித்ததுண்டா.? கடலலையின் நுரையில் கவலைகளைக் கரைத்ததுண்டா.? கார்த்திக் பிரகாசம்...