பெரிய ஈர்ப்பெல்லாம்
எதுவுமில்லை
ஏனென்றால்
அவன்
யாரென்றே எனக்குத் தெரியாது
வீட்டில் பார்த்தார்கள்
ஜாதகம் கிரகணமெல்லாம்
சாதமாக இருப்பதாக எவனோ ஒருவன்
கணித்துச் சொல்ல
அவன் வீட்டாரிடம்
சம்மதம் சொல்லிவிட்டார்கள்
எனக்கோ
மறுக்க ஏதும் காரணமில்லை
ஏற்றுக் கொள்ளவும் விருப்பமில்லை
எது நடந்தாலும்
விதி விட்ட வழியென்று
நான் தப்பித்துக் கொள்ள முயன்றேன்
அந்த நாளும் வந்தே ஆனது
முன்னே புகை மூட்டம்
அதன் திறந்த மறைவில்
அருகில் தாலிக் கட்ட
தயாராய் அமர்ந்திருந்தான்
முடிச்சுகளைப் போட்டான்
புக்ககத்திற்கு வந்தேன்
மனிதர்கள் முதல் பாத்ரூமில்
மறைந்திருக்கும் பல்லி வரை
எல்லாம் புதிது
இனி எனக்கென்று ஒதுக்கப்பட்டதாய்ச்
சொன்ன அந்த அறைக்குச் சென்றேன்
பயமாக இருந்தது
இதயத்தில் படபடப்புத் தொற்றியது
சேலையும் மாலையும் கனத்தது
யாரோ கதவைத் திறக்கும் சத்தம்
அவன் தான்
அருகில் வந்தான்
இதயம் இயல்பை மீறித் துடித்தது
குனிந்திருந்த எந்தன் தலையை நிமிர்த்தினான்
ஆடை மறைத்திருக்கும்
அந்தரங்க பாகங்கள் எதையும்
அவன் தேடி அலையவில்லை
நேராக நெற்றியில் தன்
முதல் முத்தத்தைப்
பதிய வைத்தான்
பயம் விலகியிருந்தது
படபடப்புக் குறைந்திருந்தது
இதயம் இயல்பு நிலைக்கு வந்தது
அவன் என் காதல் கணவனாகி இருந்தான்
கார்த்திக் பிரகாசம்...
எதுவுமில்லை
ஏனென்றால்
அவன்
யாரென்றே எனக்குத் தெரியாது
வீட்டில் பார்த்தார்கள்
ஜாதகம் கிரகணமெல்லாம்
சாதமாக இருப்பதாக எவனோ ஒருவன்
கணித்துச் சொல்ல
அவன் வீட்டாரிடம்
சம்மதம் சொல்லிவிட்டார்கள்
எனக்கோ
மறுக்க ஏதும் காரணமில்லை
ஏற்றுக் கொள்ளவும் விருப்பமில்லை
எது நடந்தாலும்
விதி விட்ட வழியென்று
நான் தப்பித்துக் கொள்ள முயன்றேன்
அந்த நாளும் வந்தே ஆனது
முன்னே புகை மூட்டம்
அதன் திறந்த மறைவில்
அருகில் தாலிக் கட்ட
தயாராய் அமர்ந்திருந்தான்
முடிச்சுகளைப் போட்டான்
புக்ககத்திற்கு வந்தேன்
மனிதர்கள் முதல் பாத்ரூமில்
மறைந்திருக்கும் பல்லி வரை
எல்லாம் புதிது
இனி எனக்கென்று ஒதுக்கப்பட்டதாய்ச்
சொன்ன அந்த அறைக்குச் சென்றேன்
பயமாக இருந்தது
இதயத்தில் படபடப்புத் தொற்றியது
சேலையும் மாலையும் கனத்தது
யாரோ கதவைத் திறக்கும் சத்தம்
அவன் தான்
அருகில் வந்தான்
இதயம் இயல்பை மீறித் துடித்தது
குனிந்திருந்த எந்தன் தலையை நிமிர்த்தினான்
ஆடை மறைத்திருக்கும்
அந்தரங்க பாகங்கள் எதையும்
அவன் தேடி அலையவில்லை
நேராக நெற்றியில் தன்
முதல் முத்தத்தைப்
பதிய வைத்தான்
பயம் விலகியிருந்தது
படபடப்புக் குறைந்திருந்தது
இதயம் இயல்பு நிலைக்கு வந்தது
அவன் என் காதல் கணவனாகி இருந்தான்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment