Skip to main content

Posts

Showing posts from October, 2019

துளி

மழைப் பொழுதில் வாசிக்கும் கவிதைகள் இனிமையானவை கார்த்திக் பிரகாசம்...

மன்றாடும் மழை

தூறலுக்கும் சாரலுக்கும் குடை பிடித்து நீர்புகா அங்கியணிந்து என்னை அவமானப்படுத்தாதீர்கள் கார்த்திக் பிரகாசம்...

மனுசங்க

'நீங்க நாடாரா.?' "இல்லைங்க" 'நாய்க்கரா.?' "இல்லைங்க" 'தேவரா.?' "இல்லைங்க" 'கோனாரா.?' "இல்லைங்க" 'கவுண்டரா.?' "இல்லைங்க" 'செட்டியார் முதலியாரா.?' "இல்லைங்க" 'பள்ளு பறையா.?' "இல்லைங்க" 'யாருங்க நீங்க.?' "மனுசங்க" 'அப்போ நாங்க யாராம்.?' "அதான் தெரியலைங்க... யாருங்க நீங்க" கார்த்திக் பிரகாசம்...

மயிர்கள்

மீசையிடம் தாடிக் கேட்டது நீயும் நானும் ஒன்றாகத் தானே பிறந்து வளர்ந்தோம் நீ வீரத்துக்கு நான் மட்டும் சோகத்துக்கா.? முறுக்கினைத் தளர்த்திவிட்டு மீசை சொன்னது வீரமும் சோகமும் மயிற்றில் இல்லை இருக்கும் இடம் தான் வேறே தவிர நாமிருவரும் மயிர்களே எப்போது வேண்டுமானாலும் உதிர்ந்துவிடும் வெறும் மயிர்களே... கார்த்திக் பிரகாசம்...

ஊமை

எவ்விடத்திலும் எச்சூழ்நிலையிலும் எளிதாய் சென்று தன்னை நிலை நிறுத்துகிறது பொய் ஊமையாகிட்ட உண்மைகளினால்... கார்த்திக் பிரகாசம்...

தோற்றவன்

கனவில் ஓர் பாராட்டு விழா தோற்றவர்களெல்லாம் மேடையில் வீற்றிருக்கிறார்கள் ஒன்றிலும் ஜெயித்தவர் ஒருவர் கூட இல்லை அரங்கத்தில் இதுவரையில் பலமுறை தோற்றவர்களும் உடனடியாக தோற்கயிருப்பவர்களும் வரிசை வரிசையாக அமர்ந்திருக்கின்றனர் ஆனால் எப்படி எல்லாரும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் எவருடைய முகத்திலும் துளிக்கும் கவலை இல்லை எனக்கோ ஆச்சர்யம் தோற்ற பிறகு வருத்தமில்லாமல் உங்களால் எப்படி சிரிக்க முடிகின்றது கேட்டே விட்டேன் அதற்கும் அவர் சிரித்தார் நண்பா..! நாங்கள் தோற்றுவிட்டோம் உண்மை தான் ஆனால் நாங்கள் முயற்சிக்கிறோம் தொடர்ந்து முயற்சிப்போம் வெற்றியோர் அனுபவம் முயற்சியோர் வழிமுறை தோல்வியே பாடம் நாங்கள் பாடம் கற்கிறோம் மறுபடியும் புன்னகை அப்போது தான் முகத்தைப் பார்த்தேன் அது என் முகம் உற்று நோக்கினால் அரங்கம் முழுவதும் என் முகங்களே கார்த்திக் பிரகாசம்...