Skip to main content

Posts

காலம் கடந்து மோகம் கொண்ட இரு மேகங்களின் கடைசி முத்தத்தில் பொழிந்தது மாமழை... கார்த்திக் பிரகாசம்...

அவள் என் தேவதை..

நெற்றியில் நடனம் பயிலும் ஒற்றைமுடி... சிகப்பழகை சிறப்பழகாக்கிக் கொண்டிருக்கும் சிறிய குங்குமம்... கயல் விழிகளை காந்த விழிகளாக்கிக் கொண்டிருக்கும் கண் மை... மூக்கில் மோட்சம் அடைந்திருக்கும் மூக்குத்தி... காதோரத்தில் கானம் பாடும் கம்மல்... வானவில்லை வளைத்துக் கட்டியிருக்கும் வளையல்... இணைப்பிரியா இமைகள் கூட விரதம் இருக்கின்றன இவளை விழிகள் கண்டுக் கொண்டே இருக்க.. இதயம் இரண்டும் பார்வையால் இணைந்தே இருக்க.. கார்த்திக் பிரகாசம்..

விபச்சாரி 80 ரூபாய்..

          போரில் மனைவியை இழந்த கணவன், கணவனையும் தந்தையையும் இழந்த பெண் மற்றும் அம்மாவை பார்க்காத பிள்ளை என்று ஒட்டுமொத்த ஈழத்து மக்களின் ஒருமித்த பிரதிபலிப்பு.        யாழ். தர்மினி பத்மநாபன் என்பவரால் எழுதப்பட்ட இந்த புத்தகம், "ஈழத் தமிழர்களின் ஆசைகள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் மற்றும் போரினால் அவர்கள் இழந்த வாழ்க்கை என நம்மை ஏகத்துக்கும் கரைய வைக்கின்றது. எல்லாவற்றிக்கும் மேலாக தாய் நாடான தமிழ் நாட்டிலேயே அவர்களை அகதிகள் என்று அடையாளபடுத்துவது எவ்வளவு பெரிய குற்றமென்பதை கன்னத்தில் அறைந்து உணர்த்துகிறது..  கார்த்திக் பிரகாசம்..
ஆண்களின் வாழ்க்கை காதலுக்கு முன் காதலுக்கு பின் என்று பக்குவப்படுகிறது...!!! பெண்களின் வாழ்க்கை திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் என்று திருத்தி எழுதப்படுகிறது...!!! கார்த்திக் பிரகாசம்...
அன்றாடம் தங்குவதற்கு தடமளவு கூட சொந்த இடம் இல்லாமல் தவிக்கிறான் பாமரன்.. அட்சய திரிதியைக்கு தங்கம் வாங்க முன்பதிவு செய்தும் தவிக்கிறான் பணக்காரன்.. அதிர்ஷ்டத்தை ...
உன் பார்வைக்காகவே பல நாள் காத்திருந்தவன் நான்...!! உன் காதலுக்காக காலம் முழுதும் கண்மூடித்தனமாக காத்திருப்பேன்..!!! கார்த்திக் பிரகாசம்...
நண்பனிடம் கடன் வாங்கும் போதெல்லாம் அந்த நோட்டில் காந்தி தெரிவதில்லை நண்பனின் முகம் தான் தெரிகிறது... கார்த்திக் பிரகாசம்...