Skip to main content

Posts

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_35 || அன்பளிப்பு

உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்துக் கொள்ளுவதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டு உணர்ச்சியும் ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி, குழந்தையைப் போல் ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப் பொம்மையாகக் கருதி அதற்குத் தக்கவாறு நடந்து கொள்கிறார்கள்.  ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை; அவர்களுடைய பண்பில் அந்த விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள். இந்த உண்மை எனக்கு என்றோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனத்தில் தைத்தது. அன்று முதல் நான் அவர்களைக் குழந்தைகளாக நடத்தவில்லை; நண்பர்களாக நேசித்தேன். உற்ற துணைவர்களாக மதித்தேன். உள்ளன்பு என்ற அந்தஸ்தில் அவர்களும் நானும் சம உயிர்களாக மாறினோம்.  ஒரு டைரியை மேஜைமேல் வைத்தான். பேனாவை என் கையில் கொடுத்து "எழுதுங்கள்" என்றான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. "என்ன எழுத" என்று கேட்டேன்.   " 'என் பிரியமுள்ள சாரங்கனுக்கு அன்பளிப்பு' என்று எழுதுங்கள்"
Recent posts

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_34

"இரண்டு பெண்கள்" சிறுகதையில்,  "தன் மனம் களங்கத்தோடு இருக்கும்போது அடுத்தவனைக் குற்றம் சாட்டலாமா" என்று கேட்டேன். "களங்கமில்லையென்றால் குற்றம்சாட்டத் தோன்றாதே ஸார்!" என்றார்.  என்னிடம் ஏராளமாக இருக்கும் பத்திரிகைகளையும் புத்தகங்களையும் கண்டு பிரமித்தார். இவ்வளவு படித்திருந்தும் நான் கதை எழுதாமல் இருப்பதைக் கண்டு அதிகமாகப் பிரமித்தார். பைத்தியக்காரர்! நான் புத்தகம் படிப்பது துணைக்கு ஆளில்லாத காரணத்தினாலும் விரைவில் தூக்கம் வருவதற்காக என்பதும், கதை எழுதுவதற்கு இந்தக் காலத்தில் எவ்விதப் படிப்பும் தேவையில்லை என்பதும் அவருக்குத் தெரியாத சமாசாரங்கள். . .

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_33

"தகப்பனும் மகளும்" சிறுகதையில், "அந்தப் பயல் பார்ப்பதற்குக் கௌரவமாகத் தான் இருக்கிறான் ஸார். அவன் யோக்கியன் மாதிரி நடப்பது ஒன்றே போதும். அவன் பரம அயோக்கியன் என்பதைக் காட்ட"

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_32

"சாப்பிட்ட கடன்" சிறுகதையில், சுமார் ஐம்பதினாயிரம் பெறுமதியுள்ள சொத்துக்கு இவன் அதிபதியானதும் தன் வாழ்வில் எத்தனையோ மாறுதல்கள் நிகழ்வதைக் கண்டான். முன்னால், 'என்னப்பா, கோமதிநாயகம்!' என்றுச் சொல்லித் தோளில் கைபோட்டுப் பேசியவர்கள், இப்போது அவனை முதலாளி என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். வயது சென்ற கிழவர்கள் கூட ஏக வசனத்தில் பேசுவதை நிறுத்தி 'நீங்கள் நாங்கள்' என்று பேசினார்கள். வெற்றிலை பாக்கு கடைக்காரன் வலியக் கூப்பிட்டு ஓசி வெற்றிலைக் கொடுக்கத் தொடங்கினான். பலகார கடைக்காரனோ, இப்பொழுது கடனுக்குப் பலகாரம் கொடுப்பதுடன், கொடுத்த கடனைக் கேட்பதும் இல்லை. 'முதலாளி பணம் நம்ம பணம்; எந்த நேரத்தில் போய்க் கேட்டாலும் அட்டியில்லாமல் கிடைக்கும்' இன்று பெருமையோடு சொல்லிக் கொண்டான். கோமதி நாயகமும் தான் ஒரு முதலாளி என்ற நினைப்பை மனதுக்குள் பயிர்செய்து வளர்த்தான். அதற்குத் தக்கபடி நடந்து கொள்ளவும் ஆரம்பித்தான். முன்னாள் 'நீங்கள்' என்று யாரைப் பார்த்துச் சொல்லுவானோ அவர்களை இப்போது 'நீர்' என்றும் , 'நீர்' என்று சொன்னவர்களைப் பார்த்து 'நீ' என்றும...

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_31

"வெறும் நாள்" சிறுகதையில், டாக்டர் ஒரு பெரிய பணக்காரர்; தொழிலில் கெட்டிக்காரர்; பணத்தையும் கெட்டிக்காரத்தனத்தையும்விட அவருக்கு இருக்கும் செல்வாக்கு அதிகம். அவருக்கு ஏதாவது ஒன்று என்றால் ஊரே திரண்டு வந்துவிடும். பல பணக்காரர் வீடுகளின் அந்தரங்கங்கள் தொழில் முறையில் டாக்டருக்குத் தெரிந்திருந்தன. இதனால் அந்தரங்கம் அவருடைய மனத்தை விட்டு வெளியே போகாமல் இருக்க, பல நாமரூபங்களில் அவ்வப்போது சன்மானங்களும் செய்வார்கள் பணக்காரர்கள். தேவைக்கு அதிகமான மரியாதையும் காட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களும், பணக்காரர்களும் மரியாதை காட்டக்கூடிய ஒரு மனிதனுக்கு, மற்ற ஜனங்களிடத்தில் தானாகவே மரியாதையும் செல்வாக்கும் ஏற்படாமல் வேறு என்ன செய்யும்?

லண்டனில் சிலுவைராஜ் | ராஜ் கௌதமன்

உலகத்தில் தாங்களே உயர்ந்த நாகரிகம் மிக்கவர்கள் என்பது அந்த நாடுகளைச் சேர்ந்த வெள்ளையர்களின் நம்பிக்கை. அதை மறுப்பதற்குச் சிலுவை தயாராக இல்லை. அவர்களுக்கிடையே ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றுக்கிடையில் தனிமனிதர்களின் வசதியையும் சுதந்திரத்தையும் நாகரீகமான முறையில் வளர்த்துக் கொள்ளுகிறார்கள். ஒவ்வொருவனும் இங்கே தன்னுடைய சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கவும் மாட்டான்; பிறத்தியானுடைய சுதந்திரத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்கவும் மாட்டான். இந்தியாவில் இது தலைகீழ் விகிதத்தில் இருக்கிறது. அங்கே ஒருவன் தன்னுடைய சுதந்திரத்தை விட்டுக் கொடுப்பது தியாகம்; விட்டுக் கொடுக்காதது சுயநலம். இந்த தியாகம், சுயநலம் என்ற இரண்டு ஆயுதங்களால் யாருடைய சுதந்திரத்திலும் யாரும் தலையிடலாம்; தாக்கலாம்; நெருக்கடி செய்யலாம்; தீர்ப்புக் கூறலாம். தண்டனை வழங்கலாம். சிலுவையின் இத்தகைய சிந்தனைகளை இந்தியாவில் யாரும் அறிய நேர்ந்தால் அவனுக்கு நாட்டுப் பற்று இல்லை; இக்கரைக்கு அக்கரை பச்சை என்று அலைகிறான்; இந்திய பண்பாட்டையும் நாகரிகத்தையும் சரியாக அறியாத கபோதி; நமது முன்னோர்கள் என்ன முட்டாள்களா? லௌகீக நாகரிகத்தை வெறுத்து இந்திய...

லண்டனில் சிலுவைராஜ் | ராஜ் கௌதமன்

சாதி சாதியாகப் பிரித்துவிட்டு, ஒவ்வொருவனும் தன்னை மட்டும், தன் குடும்பத்தை மட்டும், தன் சாதியை மட்டும், தன் பிராந்தியத்தை மட்டும் கவனிக்கிற ஒரு மனநிலை நிலவுகிற பிரதேசத்தில் நாடு என்கிற ஒரு நவீன மனப்பான்மை எப்படித் தோன்றும்?