"வெறும் நாள்" சிறுகதையில்,
டாக்டர் ஒரு பெரிய பணக்காரர்; தொழிலில் கெட்டிக்காரர்; பணத்தையும் கெட்டிக்காரத்தனத்தையும்விட அவருக்கு இருக்கும் செல்வாக்கு அதிகம். அவருக்கு ஏதாவது ஒன்று என்றால் ஊரே திரண்டு வந்துவிடும்.
பல பணக்காரர் வீடுகளின் அந்தரங்கங்கள் தொழில் முறையில் டாக்டருக்குத் தெரிந்திருந்தன. இதனால் அந்தரங்கம் அவருடைய மனத்தை விட்டு வெளியே போகாமல் இருக்க, பல நாமரூபங்களில் அவ்வப்போது சன்மானங்களும் செய்வார்கள் பணக்காரர்கள். தேவைக்கு அதிகமான மரியாதையும் காட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களும், பணக்காரர்களும் மரியாதை காட்டக்கூடிய ஒரு மனிதனுக்கு, மற்ற ஜனங்களிடத்தில் தானாகவே மரியாதையும் செல்வாக்கும் ஏற்படாமல் வேறு என்ன செய்யும்?
Comments
Post a Comment