படித்து முன்னுக்கு வந்த ஒவ்வொரு எஸ்.ஸிக்கும் ஒவ்வொரு விதமான நெருக்கடியும் தற்காப்பு உணர்வும் இலட்சியமும் இருந்தன. அவரவர் பிறந்து வளர்ந்த குடும்பச்சூழல், படிப்பு, வசதி, நோக்கு, வாழ்க்கை பற்றிய அபிப்ராயம், அனுபவித்த சாதி் வகைப்பட்ட அழுத்தங்கள், அவமானங்கள், உறவுகள், கிடைத்த வாய்ப்புகள்… இப்படி பலதரப்பட்ட காரணங்களால் ஒவ்வொரு எஸ்.ஸியும் உருவாக்கப்பட்டு வருகிறான். புதிதாக அமைந்து வரும் வாழ்க்கை முறையில் ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறான் என்பதில் மேற்படி தீர்மானிப்புகள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி ஒவ்வொருவரிடமும் பலமாதிரி சிக்கல்களை உண்டுபண்ணுகின்றன.
தான் ஒரு எஸ்.ஸி என்ற நிதர்சனம் அவனைப் பல்வேறு சமாளிப்புகளுக்கு இயல்பாகவே இட்டுச் செல்கிறது. அந்த ஒரு எதார்த்தத்தை விட்டு ஓடவோ, எதிர்கொள்ளவோ, சமரசம் செய்துகொள்ளவோ, அதனை மறைக்கவோ, மாற்றவோ, போராடவோ அன்னியபடவோ அந்த இடத்தில் ஒரு பொய்யை இட்டு நிரப்பவோ, வேறோரு முகமூடியை அணியவோ, மற்றவர்க்குரிய எதார்த்தத்தை தனது லட்சியமாக வளைக்கவோ, தனக்குச் சாதகமான பிம்பங்களை வடிவமைத்துக் கொள்ளவோ ஒவ்வொரு எஸ்.ஸியும் படாத பாடுபடுகின்றான். பொதுவாக எஸ்.ஸி அல்லாத வேறு ஒரு நபராகவே தன்னை உறுமாற்றுவதிலேயே அவனது முழு வாழ்க்கையும் செலவாகிக் கொண்டிருக்கிறது.

முகத்துக்கு முன்போ, முதுகுக்குப் பின்னோ விமர்சிக்கப்பட்ட சிலுவைக்கு ஒதுங்கி ஓங்கி வாழணும்கிற வீம்பு ஏற்பட்டது. நல்லதுக்கோ கெட்டதுக்கோ ஒருவனை உற்சாகமாகவும் தன்னம்பிக்கையோடவும் தள்ளிச் செல்ல ஏதோ ஒரு வீம்பு அவசியம்தான்.
காலச்சுமை | ராஜ் கௌதமன்
Comments
Post a Comment