Skip to main content

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_30

"சத்தியவான்" கதையில்,

"சாவித்திரி! தவறு உன்மீதுதான். நீ செய்யத்தகாத காரியத்தைச் செய்துவிட்டாய். என்ன நலனை நம்பி செத்தவனைப் பிழைக்க வைத்தாய்?' செத்துப்போன புண்ணிய புருஷர்கள் உயிருடன் இருந்திருந்தால் உலகத்தில் இன்று தேனும் பாலும் ஓடாதா! என்று உலகத்தார் சொல்லும் வார்த்தைகளை நம்பி விட்டாயா? ஓடிப்போன முயல் பெரிய முயல் என்பது பழமொழிதானே ஒழிய, அது உண்மையாகாது. செத்தவனை அப்படியே நிம்மதியாக விட்டுவிடாமல், இப்படிப் பிழைக்க வைத்தால், அவன் எப்படி எல்லாம் மாறுவானோ யார் கண்டது?

#கு_அழகிரிசாமி_சிறுகதைகள்

//

எமலோகத்திற்கே சென்று சண்டை போட்டு எமன் பிடுங்கிச் சென்ற தனது கணவனான சத்தியவானின் உயிரைப் போராடி மீட்டு வருகிறாள் சாவித்திரி.

சாவித்திரியால் உயிர் பிழைத்த சத்தியவான், அவளைத் தெய்வமாகப் பூஜிக்கத் தயாராக இருக்கிறான். ஆனால் அவளை மனைவியாக ஏற்கவோ மறுக்கிறான். அவன் உயிர் பிரிந்த கணமே அவள் விதவையாகி விட்டாள். செத்தவன் பிழைத்தாலும், வைதவ்யம் போய்விடுமா? எனச் சத்திரியத் தர்மத்தையும், ஆசாரத்தையும் தன்னைப் போல் கடைப்பிடித்த சத்திரியன் எவனுமே இல்லை என திருப்தியுறுகிறான்.

ஆசாரம், சத்திரியம் என்னும் அர்த்தமற்ற நம்பிக்கைகளைக் கருத்தில் கொண்டு சத்தியவான் செய்தது எந்த வகையில் தர்மம்/நியாயம் என்ற கேள்வியை எழுப்பிடும் முக்கியமான கதை.

//

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...