"சத்தியவான்" கதையில், "சாவித்திரி! தவறு உன்மீதுதான். நீ செய்யத்தகாத காரியத்தைச் செய்துவிட்டாய். என்ன நலனை நம்பி செத்தவனைப் பிழைக்க வைத்தாய்?' செத்துப்போன புண்ணிய புருஷர்கள் உயிருடன் இருந்திருந்தால் உலகத்தில் இன்று தேனும் பாலும் ஓடாதா! என்று உலகத்தார் சொல்லும் வார்த்தைகளை நம்பி விட்டாயா? ஓடிப்போன முயல் பெரிய முயல் என்பது பழமொழிதானே ஒழிய, அது உண்மையாகாது. செத்தவனை அப்படியே நிம்மதியாக விட்டுவிடாமல், இப்படிப் பிழைக்க வைத்தால், அவன் எப்படி எல்லாம் மாறுவானோ யார் கண்டது? #கு_அழகிரிசாமி_சிறுகதைகள் // எமலோகத்திற்கே சென்று சண்டை போட்டு எமன் பிடுங்கிச் சென்ற தனது கணவனான சத்தியவானின் உயிரைப் போராடி மீட்டு வருகிறாள் சாவித்திரி. சாவித்திரியால் உயிர் பிழைத்த சத்தியவான், அவளைத் தெய்வமாகப் பூஜிக்கத் தயாராக இருக்கிறான். ஆனால் அவளை மனைவியாக ஏற்கவோ மறுக்கிறான். அவன் உயிர் பிரிந்த கணமே அவள் விதவையாகி விட்டாள். செத்தவன் பிழைத்தாலும், வைதவ்யம் போய்விடுமா? எனச் சத்திரியத் தர்மத்தையும், ஆசாரத்தையும் தன்னைப் போல் கடைப்பிடித்த சத்திரியன் எவனுமே இல்லை என திருப்தியுறுகிறான். ஆசாரம், சத்திரியம் ...