இன்றைய சூழ்நிலையில் ஒரு பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ சேர வேண்டுமென்றால் முதலில் கேட்கப்படுவது மதிப்பெண்ணோ அல்லது விரும்பும் படிப்பையோ இல்லை. முதலில் கேட்கப்படும் கேள்வி நீ எந்த வகுப்பைச் சேர்ந்தவன்.?அதாவது உயர் வகுப்பை சேர்ந்தவனா இல்ல பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவனா என்பது தான்.ஏனென்றால் ஒருவன் என்னதான் நல்ல மதிப்பெண்கள் எடுத்து இருந்தாலும் அவன் நல்ல கல்லூரியில் அவனுக்கு பிடித்த பாடப்பிரிவில் சேர வேண்டும் என்றால் அது அவன் சேர்ந்த வகுப்பை சார்ந்தே அமைகிறது.காரணம் இட ஒதுக்கீடு. நல்ல தரமான கல்வி என்பது இட ஒதுக்கீட்டால் பெறக் கூடியது அல்ல. இன்றளவில் நல்ல மதிப்பெண்கள் இருந்தும் ஒருவனால் அவனது விருப்பத்திற்கேற்ற நியாமான தரமான கல்லூரியில் சேர முடியவில்லை காரணம் உயர் வகுப்பை சேர்ந்தவன் என்பதால். ஆனால் அதே கல்லூரியில் அவனை விட குறைவான மதிப்பெண் எடுத்த ஒரு பிற்படுத்தப்பட்ட ஒருவனுக்கு இடம் கிடைக்கிறது. இதுக்குப் பேர் தான் சம உரிமையா? உயர் வகுப்பில் பிறந்தது அவனுடைய தவறா? இங்கு ஒருவன் கஷ்டப்பட்டதற்கான அங்கீகாரம் மறுக்கப்படுகிறது. இதற்கு பதிலாக ஒவ்வொரு பிரிவினருக்கு ஒ...