இன்றைய சூழ்நிலையில்
ஒரு பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ சேர வேண்டுமென்றால் முதலில் கேட்கப்படுவது
மதிப்பெண்ணோ அல்லது விரும்பும் படிப்பையோ இல்லை. முதலில் கேட்கப்படும் கேள்வி நீ
எந்த வகுப்பைச் சேர்ந்தவன்.?அதாவது உயர் வகுப்பை சேர்ந்தவனா இல்ல பிற்படுத்தப்பட்ட
வகுப்பை சேர்ந்தவனா என்பது தான்.ஏனென்றால் ஒருவன் என்னதான் நல்ல மதிப்பெண்கள்
எடுத்து இருந்தாலும் அவன் நல்ல கல்லூரியில் அவனுக்கு பிடித்த பாடப்பிரிவில் சேர
வேண்டும் என்றால் அது அவன் சேர்ந்த வகுப்பை சார்ந்தே அமைகிறது.காரணம் இட
ஒதுக்கீடு.
நல்ல தரமான கல்வி என்பது இட ஒதுக்கீட்டால் பெறக்
கூடியது அல்ல. இன்றளவில் நல்ல மதிப்பெண்கள் இருந்தும் ஒருவனால் அவனது
விருப்பத்திற்கேற்ற நியாமான தரமான கல்லூரியில் சேர முடியவில்லை காரணம் உயர்
வகுப்பை சேர்ந்தவன் என்பதால். ஆனால் அதே கல்லூரியில் அவனை விட குறைவான மதிப்பெண்
எடுத்த ஒரு பிற்படுத்தப்பட்ட ஒருவனுக்கு இடம் கிடைக்கிறது. இதுக்குப் பேர் தான் சம
உரிமையா? உயர் வகுப்பில் பிறந்தது அவனுடைய தவறா? இங்கு ஒருவன் கஷ்டப்பட்டதற்கான
அங்கீகாரம் மறுக்கப்படுகிறது. இதற்கு பதிலாக ஒவ்வொரு பிரிவினருக்கு ஒவ்வொரு
கல்லூரி என்று அமைத்து விடலாமே.?
ஒரு
கல்லூரியில் ஒரு படிப்பைத் தெரிவு செய்ய அடிப்படைத் தகுதியாக மதிப்பெண்கள் தான்
இருக்க வேண்டுமே தவிர சார்ந்த வகுப்பை அடிப்படையாகக் கொள்ள கூடாது. அப்படி வகுப்பை
அடிப்படையாகக் கொள்ளுவேமேயானால் ஒரு வேளை அவன் உயர் வகுப்பை சார்ந்தவன் என்றால்
கண்டிப்பாக ஒன்றை இழக்க வேண்டி இருக்கும். அது ஒன்று அவன் விருப்பப்பட்ட
பாடபிரிவாகவோ இல்லை அவன் ஆசைப்பட்ட கல்லூரியாகவோ இருக்கும். இந்த இரண்டில் எதை
அவன் இழந்தாலும் அது படிப்பின் மீதான அவனது ஆர்வத்தைக் குறைத்துவிடும் அதேபோல ஒரு
விதமான வெறுப்பை ஏற்படுத்திவிடும்.இதனால் அவனது எதிர்காலமே நிலைகுலைய
வாய்ப்புள்ளது. ஒரு வேளை அவன் பிற்படுத்தப்பட்ட(அ) மிகவும் பிற்படுத்தப்பட்ட
வகுப்பை சார்ந்தவன் என்றால் ஒரு விதமான மெத்தனப் போக்கை ஏற்படுத்திவிடும். அது
அவனை ஒரு வட்டத்திற்குள் கொண்டு சேர்த்து விடும். நம் வகுப்பிற்கு இந்த அளவில்
இவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தால் போதுமானது என்ற அலட்சியத்தை ஏற்படுத்திவிடும்.
இதனால் அவனது முழுத் திறமை வெளி வராமல் போய் விடும் அபாயம் உள்ளது.
உயர் வகுப்பிலும்
நடுத்தர வர்க்கத்தினர் இருக்கின்றனர் அதே போல் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலும் மேல்
தர வர்க்கத்தினர் இருக்கின்றனர். ஆனால் பொதுவான இட ஒதுக்கீட்டால் உயர் வகுப்பில் உள்ள
இயலாதவனுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள ஒரு நல்ல தகுதி உள்ளவனுக்கும்
தகுந்த வாய்ப்புக் கிடைக்காமல் கடைசியில் சம்மந்தமே இல்லாத ஒருவனுக்கு சென்று
விடுகிறது.
அனைவரின் எண்ணமும் அனைத்துப் பிரிவினரும் ஒன்று என்பது தான். மாறாக இந்த இட
ஒதுக்கீடு என்ற விஷயம் தான் இன்னும் பிரிவினையை அதிகமாக்குகிறது. இடை வெளியை
குறைக்காமல் இன்னும் அதிகமாக காரணமாக இருக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டு முறையால்
பயன் அடைபவர்களை விட பாதிக்கப்படுபவர்கள் தான் அதிகம் என எண்ணத் தோன்றுகிறது. அது
தான் உண்மையும் கூட. இன்றைய அளவில் இட ஒதுக்கீடு என்பது சலுகைக்காக மட்டுமே
பயன்படுத்தபடுகிறது.
நானும் ஒரு பிற்படுத்தப்பட்டவன் தான்.
எனக்கு கல்வியில் சலுகைகள் வேண்டாம் நியாமாக கிடைக்க வேண்டியவை கிடைத்தால் போதும்.
மற்றவர் உரிமையை நாம் பறிக்க வேண்டாம் அதேபோல நாம் சார்ந்த வகுப்பிற்காக
நம் உரிமையை விட்டுக் கொடுக்கவும் வேண்டாம்.
ya da.. Im feeling much more about these issues whenever i apply for government exams..
ReplyDeleteFact Machi now govt give all facilities poverty people as well as higher caste.Political changes or Need New Rules is the only solution to avoid this things those whose are affected regarding this...Superb da...
ReplyDelete