தொழில் வளமிக்க
சென்னை போன்ற புறநகர் பகுதிகளில் பாரம்பரியமாக வாழ்பவர்களை விட வேலைக்காக இடம்
பெயர்ந்து வந்த இளைஞர்கள் தான் அதிகம். சமுகத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் பணம்
சம்பாதிக்கும் இயந்திரங்கள். தனது தாய் தந்தை கஷ்டப்பட கூடாது என்பதற்காக ஊர்
விட்டு ஊர் வந்து அவர்கள் இழக்கும் சின்னச் சின்ன சந்தோசங்கள் பற்றி யாரும்
நினைத்து பார்ப்பதில்லை.நினைத்து பார்க்க மற்றவர்களுக்கு நேரம் கூட இல்லை.
குடும்பத்திற்காக
அப்பா வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும் சகோதரியின் திருமணத்திற்க்கு பணம்
திரட்ட வேண்டும் போன்ற பல காரணங்களால் படித்து முடித்தவுடன் வேலைக்குச் சென்றாக வேண்டிய
கட்டாயத்தில் உள்ள நடுத்தர குடும்பத்திலிருந்து வரும் இளைஞர்கள் உடனடியாக சென்னை
போன்ற பகுதிக்கு வந்து தனக்கு பிடித்த தான் ஆசைப்பட்ட வேலையைப் பற்றி யோசிக்காமல்
ஏதோ ஒரு வேலையில் சேருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும்
வீட்டிற்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அந்த இளைஞன் இழக்கும் விஷயங்கள்
ஏராளமானவை... வெறும் 3 ரூபாயை மிச்சம் செய்வதற்க்காக பல மணி நேரம் White Board
பேருந்துக்காக காத்திருந்து செல்லும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
நேரத்திற்கு சாப்பிடாயா என்று கேட்பதற்குக்கூட அருகில் ஆள் இல்லாமல் மனம் உடையும்
தருணங்கள் அந்த இளைஞனின் வாழ்வில் மிகவும் பழகிப் போன ஒன்று. இதை விட கடினமான
சூழ்நிலை என்னவென்றால் உடல்நிலை சரி இல்லாத போது கூட வீட்டிலிருந்து call செய்யும்
போது உண்மையை சொன்னால் தாய் வருத்தபடுவால் என்பதற்காக “எனக்கு ஒண்ணுமில்லை அம்மா
நான் நல்லாத் தான் இருக்கேன்” என்று சொல்லும் போது கண்களில் கண்ணீர் கரைந்தோடும்,
இது போன்ற மறைக்கப்பட்ட பல வலிகள் அந்த இளைஞனுக்கும் கடவுளுக்கும் மட்டும் தான்
வெளிச்சம்..
தனது அம்மாவை பார்க்க
சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் கூட தனக்கு சம்மந்தமே இல்லாத ஒருவனிடம் அனுமதி பெற
வேண்டியுள்ளது. இதனால் சொந்த பந்தங்களுக்கும் அந்த இளைஞனுக்குமான இடைவெளி நாளுக்கு
நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. உதாரணமாக சமிபத்தில் என் நண்பன் ஒருவன் ஒரு
மாதத்திற்கு பிறகு தன் வீட்டிற்க்கு சென்றீருந்தான். அவனது குடும்பம் கூட்டுக்குடும்பம்.
என் நண்பன் தான் வீட்டின் கடைசி பையன். வீட்டினுள் நுழையும் போது அம்மா வரவேற்று
சின்ன அண்ணன் குழந்தையிடம் “”சித்தப்பா வந்திருக்காரு பாரு போ”” என்று சொல்கிறார்
ஆனால் அந்த குழந்தையால் இவர் தனது சித்தப்பா என்று உணர முடியவில்லை. மாதம் ஒருமுறை
வருவதால் அந்த குழந்தையால் அடையாளம் காண இயலவில்லை. அந்த தருணத்தில் என் நண்பன்
பெற்ற காயத்திற்கு அளவில்லை.
பெரும்பாலனோர் அந்த
இளைஞர்களின் வாழ்க்கையை பெருமையாகவும் சொர்க்கமாகவும் கருதுகின்றனர். தனது தாய்
தந்தை சகோதர சகோதரிகளை நண்பர்களை விட்டு விட்டு வெளியூரில் சம்பாதிக்கும்
இவர்களின் வாழ்க்கை வெளியில் சொர்க்கமாக தெரிந்தாலும் உண்மையில் இந்த வாழ்க்கை
நரகமாகவே இருக்கிறது..மொத்தத்தில் தன்னை சார்ந்தர்வர்களின் மகிழ்ச்சிக்காக அந்த
இளைஞர்கள் கவலை எனும் கடலில் மூழ்கிக் கிடக்கின்றனர். அந்த இளைஞர் கூட்டத்தில்
நானும் ஒருவன்..
Machi Real words da elloruthoda manasula irukuratha ne oru website ah develop paniruka really like tis da...
ReplyDeleteReally true da. When we are in some trouble if we see our amma face that problem seems like nothing. But here no chance for that too and our problems are getting worse everytime. We are struggling so much to manage that alone.
ReplyDeleteFantastic.. Its your situation right karthik..???
ReplyDelete