Skip to main content

பொறியியல் இன்றைய நிலைமை..



     கடந்த சில வருடங்களாக பொறியியல் படித்தால் லட்சக் கணக்கில் சம்பளம் என்ற மாய வலையில் விழுந்து தன் பிள்ளையை எப்படியாவது பொறியாளர் ஆக்க வேண்டும் என்ற ஆசையில் தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் பொறியியல் படிக்க வைக்கின்றனர். அதற்காக பல லட்சங்களையும் செலவு செய்கின்றனர். ஆனால் பொறியியல் படித்த இன்றைய இளைஞர்களின் நிலைமை என்ன.?
     படித்த படிப்பிற்கு சரியான வேலை கிடைக்காமல் நம் இளைஞர்கள் அன்றாடம் தனது சான்றிதல்களை தூக்கிக் கொண்டு சாலைகளில் திரியும் காட்சியை பார்ப்பது மிக வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதற்காக யாரை குற்றம் சொல்வது.. அறியாமையால் ஆசைபடும் பெற்றோர்களையா இல்லை புற்றீசல் போல கல்லூரிகளை நிறுவ அனுமதி தரும் அரசையா..??
     பொறியியல் கல்லூரிகளை அரசு பெருக்குவதற்கான காரணம் என்னவென்று புரியவில்லை..உண்மையில் அதற்கான வேலை வாய்ப்புகள்  இருக்கின்றனவா அதற்காகதான் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறதா..! வருடந்தோறும் வெளி வரும் பொறியாளர்களின்  எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இது சமுகத்திற்கு ஏற்றது அல்ல.மாணவர்களின் தரத்தை உயர்த்துவது தான் நோக்கம் என்றால் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.அப்பொழுது தான் இன்ஜினியரிங் படிப்பிற்கான தரமும் உயரும்.. ஆனால் இன்றைய சூழ்நிலையில் இன்ஜினியரிங் மீதான மதிப்பும் நம்பிக்கையும் குறைந்துக் கொண்டே வருகிறது.
     பெற்றோர்களும் இன்ஜினியரிங் மீதான மோகத்தை பற்றி சிந்திக்க வேண்டும். இந்த படிப்பை ஒரு பொருளாதாரம் சார்ந்த படிப்பாக பார்ப்பதை நிறுத்த வேண்டும்.. மற்ற அறிவு சார்ந்த படிப்புகளை பற்றி இளைஞர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.மாணவர்களும் மற்ற படிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்..
ஒரு விவாத நிகழ்ச்சியில் ஒரு இளைஞர் மேற்கோள் காட்டியது போல் இன்ஜினியரிங் படிப்பு என்பது ஒரு புனல் போல ஆகிவிட்டது. நுழைவது மிக எளிது ஆனால் வெளியில் வருவதற்காக அவர்கள் நசுக்க படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை..

           நாம் அனைவரும் விழித்து கொள்ள வேண்டிய நேரமிது..

Comments

  1. Nice.. Real feel of a young guy who have deserved for it.... even though i wish u all success my friend..

    ReplyDelete
  2. True feel !!! All the best, sure you will win in your race....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...