Skip to main content

Posts

Showing posts from April, 2014
நம் நாட்டில், அதிகாரம் இல்லாமல் செய்தால் அது தவறு மற்றும் தண்டனைக்குரியது.. அதுவே, அதிகாரத்தோடு செய்தால் அது சட்டம்... கார்த்திக் பிரகாசம்....
மற்றவர் மீது அன்பு செலுத்த முடியாதவனுக்குத் தான் உண்மையான ஊனம்.. கார்த்திக் பிரகாசம்...
காதலும் நட்பும் ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுக்க முடியாத உறவுகள்.. ஆதலால் தான் தோழன்/தோழியிடம் காதலையும் காதலன்/காதலியிடம் நட்பினையும் எதிர்ப்பார்க்கிறது மனசு.. கார்த்திக் பிரகாசம். ..
மதம் மாறுவது அவரவர் விருப்பம் ஆனால் மதம் மாறுவது என்பது நம்முள் வேற்றுமை உணர்வு மேலோங்கி நிற்பதற்கு அப்பட்டமான உதாரணம்.. கார்த்திக் பிரகாசம்...

கவலை

"எனக்காக கவலைப்படு" "எனக்காக கவலைப்படு" என்று மனதிற்குள் கவலைகள் முந்தியடித்துக் கொண்டிருக்கின்றன.. எதற்காக கவலைப்படுவது என்று தெரியவில்லை. ஆதலால் கவலைப்படுவதையே நிறுத்தி விட்டேன்.. கார்த்திக் பிரகாசம்...
நான் உன் அன்பிற்காக மட்டும் காத்திருந்த வேளையில் மற்றவர்கள் என் மீது செலுத்திய அன்பினை உதாசினப்படுத்தினேன் அதன் விளைவு இன்று நீ இன்னொருவரின் அன்பிற்காக காத்திருக்கிறாய் என்னை உதாசினப் படுத்திவிட்டு... கார்த்திக் பிரகாசம்..
மதச் சார்புள்ள கட்சி மற்றும் மதச் சார்பற்ற கட்சி என அனைத்து அரசியல் கட்சிகளுமே ஒரு விதத்தில் இறைவனின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை ஆனால் இன்று வரை அரசியல் கட்சிகள் அதற்காக அரும்பாடு பட்டு மக்களை ஏழ்மையாகவே வைத்து அவர்களிடம் இறைவனைக் காண முயற்சி செய்துக் கொண்டிருக்கின்றன..  கார்த்திக் பிரகாசம்..

பரிசு

    நாம் ஒருவருக்கு செய்த உதவியால் நமக்கு கிடைக்கும் மிக அற்புதமான பலன் என்பது என்றாவது ஒரு நாள் அவர் மீண்டும் நமக்கு உதவுவார் என்பதில் இல்லை. அது அவர்களால் நமக்கு ஏற்படும் உணர்வு சம்மந்தபட்டது. பணத்துக்கு பதில் பணம்.. உதவிக்கு பதில் உதவி என்பதில் இல்லை மகிழ்ச்சியும் மன திருப்தியும் . இதை மிக அழகாக ஒரு விளம்பர காணொளி மனதில் செலுத்திவிட்டு சென்றது.     ஒருவன் தினமும் தான் செல்லும் பாதையில், அவன் காணும் முடியாதவர்களுக்கும் வேண்டுபவர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டே செல்கிறான். வழியில் வீணாக தண்ணீர் வழிந்து கொண்டிருக்கிறது. அதை பூந்தொட்டிக்கு பயன்படுமாறு செய்கிறான். அதே போல் வயதான பாட்டிக்கு அவர் நடத்தும் தள்ளுவண்டி கடையை பள்ளத்தில் ஏற்ற உதவுகிறான்.     இப்படியாக செல்லும் போது ஒரு பெண் குழந்தையும் அவளுடைய தாயும் தங்கள் முன் ஒரு வாக்கியத்தை எழுதி வைத்து உதவிக் கேட்டு (நம்மூரில் பிச்சை) அமர்ந்து இருக்கின்றனர்.அதை பார்த்தவுடன் தன்னில் இருக்கும் பணத்தில் பாதியைக் குழந்தையின் கையின் கொடுத்துவிட்டு செல்கிறான். மறுநாளும் அதே இடத்தில அந்...
ரத்தம் உறிஞ்சும் போட்டி வைத்தால் அட்டைப் பூச்சிகளை மிஞ்சிவிடும் போலிருக்கிறது இந்த ஐ.டி கம்பெனிகள்.. கார்த்திக் பிரகாசம் ..
செல்லும் பாதை முட்களால் நிறைந்திருந்தால்  வலித்தாலும் பரவாயில்லை என்று மேற்கொண்டுச் செல்லலாம் ஆனால் பாதை உடலைத் துளைத்த தன் சொந்த பந்தங்களின் உயிரைப் பறித்த துப்பாக்கிக் குண்டுகளால் நிறைந்திருக்கிறதே அவர்களின் வாழ்க்கை என்ன செய்வது.. கார்த்திக் பிரகாசம்..