நாம் ஒருவருக்கு செய்த உதவியால் நமக்கு கிடைக்கும் மிக அற்புதமான பலன் என்பது என்றாவது ஒரு நாள் அவர் மீண்டும் நமக்கு உதவுவார் என்பதில் இல்லை. அது அவர்களால் நமக்கு ஏற்படும் உணர்வு சம்மந்தபட்டது. பணத்துக்கு பதில் பணம்.. உதவிக்கு பதில் உதவி என்பதில் இல்லை மகிழ்ச்சியும் மன திருப்தியும் . இதை மிக அழகாக ஒரு விளம்பர காணொளி மனதில் செலுத்திவிட்டு சென்றது.
ஒருவன் தினமும் தான் செல்லும் பாதையில், அவன் காணும் முடியாதவர்களுக்கும் வேண்டுபவர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டே செல்கிறான். வழியில் வீணாக தண்ணீர் வழிந்து கொண்டிருக்கிறது. அதை பூந்தொட்டிக்கு பயன்படுமாறு செய்கிறான். அதே போல் வயதான பாட்டிக்கு அவர் நடத்தும் தள்ளுவண்டி கடையை பள்ளத்தில் ஏற்ற உதவுகிறான்.
இப்படியாக செல்லும் போது ஒரு பெண் குழந்தையும் அவளுடைய தாயும் தங்கள் முன் ஒரு வாக்கியத்தை எழுதி வைத்து உதவிக் கேட்டு (நம்மூரில் பிச்சை) அமர்ந்து இருக்கின்றனர்.அதை பார்த்தவுடன் தன்னில் இருக்கும் பணத்தில் பாதியைக் குழந்தையின் கையின் கொடுத்துவிட்டு செல்கிறான். மறுநாளும் அதே இடத்தில அந்தப் பெண் குழந்தையும் தாயும் அதே வாக்கியத்தை எழுதி வைத்துவிட்டு அமர்ந்து இருக்கின்றனர்.. அவன் மறுபடியும் மீண்டும் பணம் கொடுத்துவிட்டு செல்கிறான். இதே போல சில நாட்கள் அவர்களுக்கு வாடிக்கையாக பணம் கொடுக்கிறான்.
சில நாட்களுக்கு பிறகு அவன் அந்த வழியில் செல்லும் போது அந்த தாய் மட்டும் அமர்ந்திருக்கிறாள். பெண் குழந்தையைக் காணவில்லை அந்த வாக்கியத்தையும் காணவில்லை. அவள் எங்கே என்பது போன்ற கேள்வி பார்வையுடன் அந்த தாயைப் பார்க்கிறான். அந்த தாய் உடனே தன் பார்வையை தனது இடதுபுறமாக சிதறவிடுகிறாள்.
அங்கே அந்த சின்னச் செல்ல மகள் பள்ளிச் சீருடையில் துள்ளிக் குதித்து ஓடி வருகிறாள். ஓடி வந்து அந்த குழந்தை ஆசை ஆசையை அவன் கன்னத்தில் முத்தமிட அவன் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. ஏனென்றால் அவன் அந்த குழந்தைக்கு பணம் கொடுக்கும் போது அங்கு எழுதப்பட்டிருந்த வாக்கியம் ""இங்கு நான் அமர்ந்திருப்பது என் கல்விக்காக""..
தான் செய்த சிறு உதவிக்குக் கிடைத்த இந்த குழந்தையின் உணர்வுபூர்வமான பாசத்தையும், அழகு முத்தத்தையும் விட மிகச் சிறந்த உணர்வு வேறேதும் இருக்க முடியாது. பதிலுக்கு அவனுக்கு 100 கோடி ரூபாய் கிடைத்திருந்தாலும் இது போன்ற உணர்ச்சிகரமான தருணத்தையும் அந்த குழந்தையின் மனம் நிறைந்த பாசத்தையும் பெற்று இருக்க இயலாது.
உதவிக்கு கைமாறாக மற்றொரு உதவித் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.நம் நன்றியை அந்த சின்னச்சிறு குழந்தையைப் போல உணர்ச்சிகரமாக உண்மையாக வெளிப்படுத்தினாலே போதும்.
உணர்ச்சிகரமான தருணங்களால் நிறைந்த வாழ்கை நாம் நல்வழியில் பயணப்பட்டுள்ளோம் என்பதற்கான சான்று. ஆயிரம் லட்சம் என பணத்திற்காகப் பயணிப்பதைவிட இது போன்ற தருணங்களில் பயணிப்பதே மன நிம்மதி தரும் என்பதை மூன்று நிமிட காணொளி உணர்த்திவிட்டது..
கார்த்திக் பிரகாசம்..

Comments
Post a Comment