Skip to main content

Posts

Showing posts from June, 2014

காதல்

      காதல்: வார்த்தைகளால் மட்டும் முழு உணர்வுகளையும் வெளிப்படுத்த இயலாத ஒரு உணர்வு. வார்த்தைகளுக்கு வறட்சியை  ஏற்படுத்திவிட்டு நினைவுகளில் வெள்ளத்தை உண்டாக்கும் உறவு. ஒரு கட்டத்தில் வார்த்தைகள் மௌனமாகி கண்களை  உயிர்த்தெழுந்து பேச வைக்கும் மாயாஜாலம்.      காதலிக்கும் ஒவ்வொருவருக்கும் தன் காதலனுடன்/காதலியுடன் பல ஆண்டுக் காலம் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இன்று படித்த ஒரு செய்தி பல ஆண்டுக்காலம்  ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்தால் தான் காதல் என்றில்லை என்பதை உணர வைத்தது. இன்னும் 10 மணி நேரம் தான் உயிர் வாழ்வான் என தெரிந்தும் தன் காதலனைக் கரம் பிடித்த ஒரு காதலி.       உடல்நிலை சரியில்லாமல் மருத்துமனையில் இருக்கும் தன் காதலன் இன்னும் 10 மணி நேரத்தில் இறக்கப் போகிறான் என்ற துக்கச் செய்தியை மருத்துவர்கள் வாயிலாக அறிந்தவுடன் உறவினர்களின் எதிர்ப்பையும் அறிவுரையையும் மீறி மருத்துவமனையிலேயே திருமணத்திற்கு ஏற்பாடு செய்து, அந்தப் பெண் படுத்தப்படுக்கையில்  இருக்கும் தன் காதலனை கரம் பிடித்துள...

இந்த வார "அம்மா" திட்டம்.

      போன வாரம் "அம்மா உப்பு" திட்டம் என்றால் இந்த வாரம் அதாவது நாளை முதல் "அம்மா மருந்தகங்கள்" தமிழ் நாடெங்கும் ஆரம்பமாம். இன்னும் எது எது "அம்மா" திட்டத்தில் கொண்ட வர போகிறார்களோ தெரியவில்லை.        கிண்டலுக்குத் தான் எல்லோரும்  ஒரு நாள் தமிழ் நாடும் அம்மா நாடு என்று ஆக்கப்படும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். போகிற போக்கைப் பார்த்தால் அதும் கூடிய சீக்கிரத்தில் நடந்திரும் போலிருக்கிறது.        பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வரும் போது காமராஜர் அதற்கு அவரது பெயரை வைத்துக் கொள்ளவில்லை.. அத்திட்டத்தை மேம்படுத்திய எம்ஜிஆர் அவர்களும் அவரது பெயரை வைத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் அந்த இரு மாமனிதர்களுக்கும் தெரியும் அது மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காக செய்யப்படுகிறது அதற்கு தாங்கள் உரிமை கொண்டாட முடியாது என்று. ஆனால் இன்று அவர்களது பெயர்களைச் சொல்லி ஆட்சி செய்பவர்கள் என்னவென்றால் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் அவர்களது பெயரை வைத்துக் கொள்கின்றனர்..       அரசு ...
கடவுளின் மீது வைக்கும் நம்பிக்கையை விட காலத்தின் மீது அதிகம் வைக்கிறேன் என்னையும் ஒரு நாள் மன்னனாக்கும்... கார்த்திக் பிரகாசம்..
"பூவாய்" நம் காதல் "முள்ளாய்" உன் நினைவுகள்... கார்த்திக் பிரகாசம்..
 பெரிய  ENGINEER ஆக வேண்டும் என்ற பல பேருடைய கனவு வெறும் EXCEL SHEET க்குள் முடங்கி விடுகிறது.. கார்த்திக் பிரகாசம்..
என் நண்பனும் நானும் வெளியில் சென்றிருந்தோம். நாங்கள் ஒரு இடத்தில் அமர்ந்திருக்க இரு வேறு குடும்பத்தினர் சந்தித்து கொண்டனர்.. அவர்கள் பேசியதை வைத்து பார்க்கும் போது ஏற்கனவே நன்கு அறிந்தவர்கள் என்பது தெளிவாக தெரிந்தது. வழக்கமான கேள்வி மற்றும் விசாரிப்புகள் முடிந்தவுடன் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளைப் பற்றி பேச ஆரம்பத்தினர். இரு குடும்பத்தினருமே  தன் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் அது இருக்கிறது இது இருக்கிறது  என்று பெருமிதம் அடைந்துக் கொண்டிருந்தனர்.. இறுதியில் பள்ளி கட்டணம் பற்றி ஆரம்பித்தனர். அவர்கள் பள்ளிக் கட்டணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தவுடன் எனக்கும் என் நண்பனுக்கும் தூக்கிவாரிப் போட்டது. ஒருவர் என்னவென்றால் தன் பிள்ளை படிக்கும் பள்ளியில் தான் கட்டணம் மிகக் குறைவு அதுவும் வெறும் 42000 என்கிறார். அதற்கு  மற்றொருவர் என்னவென்றால் இங்கு 54000 ஆனால் பிள்ளைகளுக்கு சிங்கிங் டான்சிங் ஸ்விம்மிங் என்று அனைத்தும் கற்றுத் தருகிறார்கள் என்கிறார். என் மனதில் "அட பாவிகளா, எங்கப்பா எனக்கு கல்லூரிக்குக் கூட இவளவு செலவு செய்யவில்லையே" என்ற குரல் ஒலித்தது. இருந்தாலும் இவளவு செலவு...
காலம் கருணையற்றது... ஒவ்வொரு வினாடியும் சாமானியன் முதல் சக்கரவர்த்தி வரை ஒவ்வொருவரையும் தண்டித்துக் கொண்டிருக்கிறது.. கார்த்திக் பிரகாசம்..