போன வாரம் "அம்மா உப்பு" திட்டம் என்றால் இந்த வாரம் அதாவது நாளை முதல் "அம்மா மருந்தகங்கள்" தமிழ் நாடெங்கும் ஆரம்பமாம். இன்னும் எது எது "அம்மா" திட்டத்தில் கொண்ட வர போகிறார்களோ தெரியவில்லை.
கிண்டலுக்குத் தான் எல்லோரும் ஒரு நாள் தமிழ் நாடும் அம்மா நாடு என்று ஆக்கப்படும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். போகிற போக்கைப் பார்த்தால் அதும் கூடிய சீக்கிரத்தில் நடந்திரும் போலிருக்கிறது.
பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வரும் போது காமராஜர் அதற்கு அவரது பெயரை வைத்துக் கொள்ளவில்லை.. அத்திட்டத்தை மேம்படுத்திய எம்ஜிஆர் அவர்களும் அவரது பெயரை வைத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் அந்த இரு மாமனிதர்களுக்கும் தெரியும் அது மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காக செய்யப்படுகிறது அதற்கு தாங்கள் உரிமை கொண்டாட முடியாது என்று. ஆனால் இன்று அவர்களது பெயர்களைச் சொல்லி ஆட்சி செய்பவர்கள் என்னவென்றால் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் அவர்களது பெயரை வைத்துக் கொள்கின்றனர்..
அரசு மக்களின் முன்னேற்றத்திலும் ஆட்சியிலும் கவனம் செலுத்தாமல் வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக செயல்படுவது நன்றன்று. அரசே அனைத்துத் துறைகளையும் தனியாருக்கு தாரை வார்க்கிறது.. பிறகு அரசே "பாமர மக்களின் நலன் கருதினு" ஒரு அறிவிப்பை வெளியிட்டு விட்டு இது போன்ற இலவச மற்றும் மலிவு விலை திட்டங்களை அளிக்கிறது.. அத்திட்டத்திற்கு அவர்களது பெயர்களையே வைத்துக் கொள்கிறது. அதற்கு பதிலாக தனியார் வசம் கொடுக்காமல் இருந்தால் விலையை அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.
கார்த்திக் பிரகாசம்..

ராஜாஜி அவர்கள் சொன்னது போல் "Government is for Governance Not for Business". சரி. அடுத்து என்ன "அம்மா திட்டம்" என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கார்த்திக் பிரகாசம்..
Comments
Post a Comment