என் நண்பனும் நானும் வெளியில் சென்றிருந்தோம். நாங்கள் ஒரு இடத்தில் அமர்ந்திருக்க இரு வேறு குடும்பத்தினர் சந்தித்து கொண்டனர்.. அவர்கள் பேசியதை வைத்து பார்க்கும் போது ஏற்கனவே நன்கு அறிந்தவர்கள் என்பது தெளிவாக தெரிந்தது. வழக்கமான கேள்வி மற்றும் விசாரிப்புகள் முடிந்தவுடன் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளைப் பற்றி பேச ஆரம்பத்தினர். இரு குடும்பத்தினருமே தன் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் அது இருக்கிறது இது இருக்கிறது என்று பெருமிதம் அடைந்துக் கொண்டிருந்தனர்.. இறுதியில் பள்ளி கட்டணம் பற்றி ஆரம்பித்தனர். அவர்கள் பள்ளிக் கட்டணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தவுடன் எனக்கும் என் நண்பனுக்கும் தூக்கிவாரிப் போட்டது.
ஒருவர் என்னவென்றால் தன் பிள்ளை படிக்கும் பள்ளியில் தான் கட்டணம் மிகக் குறைவு அதுவும் வெறும் 42000 என்கிறார். அதற்கு மற்றொருவர் என்னவென்றால் இங்கு 54000 ஆனால் பிள்ளைகளுக்கு சிங்கிங் டான்சிங் ஸ்விம்மிங் என்று அனைத்தும் கற்றுத் தருகிறார்கள் என்கிறார். என் மனதில் "அட பாவிகளா, எங்கப்பா எனக்கு கல்லூரிக்குக் கூட இவளவு செலவு செய்யவில்லையே" என்ற குரல் ஒலித்தது. இருந்தாலும் இவளவு செலவு செய்கிறார்கள் என்றால் கண்டிப்பாக இவர்கள் பிள்ளைகள் 10 அல்லது 12ம் வகுப்பில் படிப்பார்கள் என்று மனதைத் தேத்திக் கொண்டேன் ஆனால் அது வெகு நேரம் நீடிக்கவில்லை.சில மணி துளிகளில் ஒரு இடி விழுந்தது. ஒருவருடைய பிள்ளை இப்பொழுது தான் ஒன்றாம் வகுப்பு செல்கிறான் இன்னொருவரின் பிள்ளை இப்பொழுது தான் மூன்றாம் வகுப்பு செல்கிறாள். உடனே நாங்கள் அங்கு இருந்து கிளம்பிவிட்டோம்.
ஆனாலும் நினைப்பெல்லாம் அதைச் சுற்றியே இருந்தது. நம் சமூகத்தில் இது போன்ற அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளியில் தன் பிள்ளைகளை படிக்க வைத்தால் தான் நமக்கு கௌரவம் என்ற மாயை மேலோங்கி வருவதாக தெரிகிறது. ஆனால் இது எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதாக தெரியவில்லை.
நம் பிள்ளைகளைப் பணக்கார பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாழ்கைக்குத் தேவைப்படும் நல்ல பண்புகளைக் கற்று தரும் நடுத்தர பள்ளியில் படிக்க வைத்தாலே போதும். அவர்களின் வாழ்க்கைச் சிறப்படையும்.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment