காதல்: வார்த்தைகளால் மட்டும் முழு உணர்வுகளையும் வெளிப்படுத்த இயலாத ஒரு உணர்வு. வார்த்தைகளுக்கு வறட்சியை ஏற்படுத்திவிட்டு நினைவுகளில் வெள்ளத்தை உண்டாக்கும் உறவு. ஒரு கட்டத்தில் வார்த்தைகள் மௌனமாகி கண்களை உயிர்த்தெழுந்து பேச வைக்கும் மாயாஜாலம்.
காதலிக்கும் ஒவ்வொருவருக்கும் தன் காதலனுடன்/காதலியுடன் பல ஆண்டுக் காலம் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இன்று படித்த ஒரு செய்தி பல ஆண்டுக்காலம் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்தால் தான் காதல் என்றில்லை என்பதை உணர வைத்தது. இன்னும் 10 மணி நேரம் தான் உயிர் வாழ்வான் என தெரிந்தும் தன் காதலனைக் கரம் பிடித்த ஒரு காதலி.
உடல்நிலை சரியில்லாமல் மருத்துமனையில் இருக்கும் தன் காதலன் இன்னும் 10 மணி நேரத்தில் இறக்கப் போகிறான் என்ற துக்கச் செய்தியை மருத்துவர்கள் வாயிலாக அறிந்தவுடன் உறவினர்களின் எதிர்ப்பையும் அறிவுரையையும் மீறி மருத்துவமனையிலேயே திருமணத்திற்கு ஏற்பாடு செய்து, அந்தப் பெண் படுத்தப்படுக்கையில் இருக்கும் தன் காதலனை கரம் பிடித்துள்ளால். உறவினர்களும் கண்ணீருடன் ஆசிர்வாதம் செய்துள்ளனர்.. இதில் இன்னும் சோகம் என்னவென்றால் மணமான 10 நிமிடத்தில் அந்த காதலன் இறந்துவிட்டான்.
திருமணம் செய்துக் கொண்டு பல ஆண்டுக்காலம் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்தால் தான் காதல் வாழ்கிறது என்றில்லை. அப்பொழுது தான் காதல் வெற்றி பெற்றது என்றும் அர்த்தம் இல்லை. தன் காதலன்/ காதலி நினைவுகளை சுமந்துக் கொண்டு இருந்தாலே அந்த காதலும் வாழ்ந்துக் கொண்டே இருக்கும். அதுவும் வெற்றி பெற்ற காதலே..
கார்த்திக் பிரகாசம்..

Comments
Post a Comment