Skip to main content

Posts

Showing posts from June, 2019

அம்மாவின் காதலன்

காலையில் இருந்து பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள் அம்மா. வெகுநாட்களுக்குப் பிறகு வாசலில் பெரிய ரங்கோலி கோலமாகப் போட்டு, அமர்க்களமாக கலர் பொடிகள் தூவி மத்தியில் சாணியை பிள்ளையாராக மாற்றி அமர வைத்திருந்தாள். தலைக்கு குளித்து ஈரத்தை முழுவதும் துவட்டாமல் துண்டுடன் சேர்த்துக் கூந்தலைச் சுற்றிக் கொண்டை போட்டிருந்தவள்,இத்தனை நாளாய் ஒளித்து வைத்திருந்த ஏதோவொரு அழகை இன்று அனிச்சையாக அள்ளித் தெளித்தாள். நிரந்தரமாக பதிந்துவிட்ட அந்தக் கருவளையத்தை மறைத்துக் காட்ட பெரும் சிரமப்பட்டிருப்பாள் போலிருக்கிறது. பெரும் வெற்றிக் கிட்டிருக்கிறது. மஞ்சள் பூசிய முகத்தில் முன்னெப்போதும் கண்டிராத குதூகலமும், பிரகாசமும் பொங்கி வழிந்தன. தேங்காய் சில்லுகள் மிதக்கும் வெண்டக்காய் புளிக் குழம்பு, முட்டைகோஸ் கூட்டு, அவரைக்காய் பொரியல், கத்திரிக்கா முறங்கா சாம்பார், ரசம், அப்பளம் என சமையற்கட்டில் இருந்து மிதந்து வந்த வாசம் வீடு முழுவதும் பரவி தூசி துரும்பென யாவற்றுக்கும் வந்தனம் சொல்லியது. "இன்னைக்கு ஏதாவது விஷேசமா மா" 'இல்லடா கிருஷ்ணா' "அமாவாசை பௌர்ணமி ஏதாவது" 'அதெல்லாம் ஒண்ணுமில்லடா...

நிறைவுற

அழுவதற்கும் சிரிப்பதற்கும் உன் வார்த்தைகளே போதுமானதாக இருக்கிறது ராகா..!!! கார்த்திக் பிரகாசம்...

ஏகாங்கி

தயவுசெய்து எழுப்பிவிடாதீர்கள் நான் இன்னும் உறங்கவே இல்லை கார்த்திக் பிரகாசம்...

மவராசி

சுருட்டி வைத்த நைந்த பாயாய் ஒரு ஓரமாய் சுருண்டிருக்கிறாள் கிழவி பருத்த ஆடிக்குள் பதுங்கியிருக்கும் கண்களினூடே பலமுறை உடைந்து ஒட்டுப் போட்ட அவ்வுருவத்தைக் கண்டான் கிழவன் தோல் சுருங்கிய தேகத்தில் உள்ளங்கை ரேகையாய் உடல் முழுவதும் வரி வரியாய் வளைந்தும் நெளிந்தும் ஓடும் கோடுகள் ஏழு பிள்ளைகளைச் சுகமாய் தாங்கிய (அதிலொன்று கருவிலேயே சிதைந்துவிட்டது) கனத்த வயிறென்றவொன்று இப்போது அங்கில்லை ஜாக்கெட்டுக்குள் கையை விட்டு அக்குளில் சொறிந்து விடுகிறாள் கிழவி வடிவிழந்து வற்றிப் போய் தொங்குகின்றன முலைகள் தேங்காய்நார் போல் நரைத்த முடிகள் விரைத்து நிற்கின்றன எழுந்துச் சென்று நிலைக் கண்ணாடியின் முன்நின்று தன்னுருவத்தைக் கண்டு மனதிற்குள் சத்தமில்லாமல் சொல்லிக் கொண்டான் கிழவன் மவராசி இவளுக்கு முந்தி நா போய் சேந்தரனும் கார்த்திக் பிரகாசம்...

ராணி

அழகான பேருல. யாரு பாட்டி எனக்கு இந்தப் பேர வச்சது. எவளோ ஆச ஆசையா வச்சிருப்பாங்க. நான் ராணி மாதிரி வாழணும்னுதான இந்தப் பேர வச்சிருப்பாங்க. ஆனா இந்தப் பேரச் சொல்லிக் கூப்டா எனக்குச் சந்தோஷமாவே இல்ல பாட்டி. யாராவது என்ன ராணின்னு கூப்புடும் போது ராணி மாதிரி நெனப்பு ஒருநாளும் வந்தது இல்ல. யாரோ யாரையோ கூப்புட்ற மாதிரி இருக்கும். அதுவும் அந்த செட்டியார் அம்மா, "ஏய் ராணி. கக்கூஸ சரியா கழுவுனியா இல்லையா... எப்புடி நாத்தம் அடிக்கிது பாரு. போ போய் நல்லா பினாயில் ஊத்தி இன்னொரு மொற சுத்தமா கழுவி வுடுன்னு" சொல்றபோ, பண்றதெல்லாம் அடிமை வேல இந்த லட்சணத்துல பேரு மட்டும் ராணின்னு எனக்கே என்மேல வெறுப்பா இருக்கும். 'யாரு பாட்டி இந்தப் பேர வச்சது' கோவம் கோவமா வருது. நேத்து அந்த முதலியார் வீட்டம்மாகிட்ட, "அம்மா பசிக்குது. வயித்துக்கு ஏதாவது போட்டுட்டு பாத்திரம் வெளக்கட்டுமான்னு கேக்றேன். அதுக்கு அந்தம்மா, இங்க எல்லா பாத்திரமும் கழுவாம கொட்டிக் கெடக்கு. மலையாட்டம் வேல இருக்கும் போது உனக்கெல்லாம் எப்படிதான் சாப்புட தோணுதோ. மொதல்ல வேலைய முடி அப்புறம் சாப்டுக்குலாம். 'பேரு ராணின்னு வச...

மனதோடு

கடற்கரைக்குச் சென்றுவிட்டு திரும்பும் போதெல்லாம் காலோடு மணல் ஒட்டிக் கொண்டு வருகிறதோ இல்லையோ மனதோடு கவிதை ஒட்டி வந்துவிடுகிறது...! கார்த்திக் பிரகாசம்...