அழகான பேருல. யாரு பாட்டி எனக்கு இந்தப் பேர வச்சது. எவளோ ஆச ஆசையா வச்சிருப்பாங்க. நான் ராணி மாதிரி வாழணும்னுதான இந்தப் பேர வச்சிருப்பாங்க. ஆனா இந்தப் பேரச் சொல்லிக் கூப்டா எனக்குச் சந்தோஷமாவே இல்ல பாட்டி.
யாராவது என்ன ராணின்னு கூப்புடும் போது ராணி மாதிரி நெனப்பு ஒருநாளும் வந்தது இல்ல. யாரோ யாரையோ கூப்புட்ற மாதிரி இருக்கும். அதுவும் அந்த செட்டியார் அம்மா, "ஏய் ராணி. கக்கூஸ சரியா கழுவுனியா இல்லையா... எப்புடி நாத்தம் அடிக்கிது பாரு. போ போய் நல்லா பினாயில் ஊத்தி இன்னொரு மொற சுத்தமா கழுவி வுடுன்னு" சொல்றபோ, பண்றதெல்லாம் அடிமை வேல இந்த லட்சணத்துல பேரு மட்டும் ராணின்னு எனக்கே என்மேல வெறுப்பா இருக்கும்.
'யாரு பாட்டி இந்தப் பேர வச்சது' கோவம் கோவமா வருது.
நேத்து அந்த முதலியார் வீட்டம்மாகிட்ட, "அம்மா பசிக்குது. வயித்துக்கு ஏதாவது போட்டுட்டு பாத்திரம் வெளக்கட்டுமான்னு கேக்றேன். அதுக்கு அந்தம்மா, இங்க எல்லா பாத்திரமும் கழுவாம கொட்டிக் கெடக்கு. மலையாட்டம் வேல இருக்கும் போது உனக்கெல்லாம் எப்படிதான் சாப்புட தோணுதோ. மொதல்ல வேலைய முடி அப்புறம் சாப்டுக்குலாம். 'பேரு ராணின்னு வச்சுக்கிட்டா பெரிய மகாராணின்னு நெனப்பு வேலைய முடிக்காம சாப்பிடணுமாம்ல' என் காதுல விழுற மாதிரி மொனவிட்டே போகுது.
பணக்கார வீட்டு பிள்ளைங்களுக்கு மட்டும்தான் ராணின்னு பேரு வைக்கணும்னு சட்டம் கிட்டம் ஏதாவது இருக்கா பாட்டி. அது சரி. சட்டத்துல இருக்குற மாதிரியேவா எல்லாம் நடக்குது.
அன்னைக்கு அந்தக் கணக்கு டீச்சர் எளக்காரமா சிரிச்சிட்டே கேக்கறாங்க, "ரிப்பன் கட்டல. தலைக்கு எண்ணெ வக்கில. சட்ட இப்பிடி அழுக்கா இருக்கு. உனக்கெல்லாம் யாரு ராணின்னு பேரு வச்சா. ராணினா எப்டி இருக்கனும் தெரியுமா.?".
உடனே பிள்ளைங்களும் 'ராணி கீணி அழுகுணி'ன்னு கிண்டல் பண்ணிச் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. பக்கத்துக் குடிசைல இருக்காப்பாரு தேவி அவளும்கூட பழிச்சுக் காட்னா. எனக்கு அழுகையே வந்துருச்சு. ஏன் பாட்டி ரிப்பன் கட்டாம தலைக்கு எண்ணெ வைக்காம போனா ராணின்னு பேரு இருக்கக் கூடாதா.
'வறுமைக்கும் பேருக்கும் என்ன சம்மந்தம்'
மூணு வேள திங்கறதுக்கே நாயா கெடந்து அலையறோம். காசிருந்தா நாமளும் அந்த செட்டியார் பொண்ணு மாதிரி ஒழுங்கா சட்ட போடமாட்டமா... இல்ல தலைக்கு தான் எண்ணெ வச்சு படிய வாரிட்டு போகமாட்டமா... சொல்லு..!
'அந்த டீச்சருக்கு என் பேரு பிரச்சனையா இல்ல நான் ஸ்கூல்க்கு போறது பிரச்சனையா பாட்டி'
'நான் ராணியாட்டம் இல்லாததுக்கு யாரு காரணம்'
ஆனா பாட்டி.. நீ ராணின்னு கூப்புடும் போது எப்படி இருக்கும் தெரியுமா எனக்கு... அந்த ஒத்தக் கோழி எறகு காம்ப காதுல விட்டு திருவும் போது இருக்குமே சொகமா.. அப்படி இருக்கும். காது வாங்கி ஒடம்பு முழுசுக்கும் அப்டியே அனுப்பி உசுருல ஓட வைக்கும் பாரு... ப்பா. ஒடம்பெல்லாம் சிலிர்த்து போய்டும்
அடிக்கடி கூப்டமாட்ட... ஆனா... நீ ஒரு தடவ கூப்டத ஓராயிரம் தடவ மனசுக்குள்ள போட்டு நெனச்சி நெனச்சி பாப்பேன். இப்பவும் நெனச்சி பாக்குறேன். இன்னும் கொஞ்ச நாள் நீ உயிரோட இருந்திருக்கலாம்..
'ஏன் பாட்டி நீயும் செத்துப் போன'
ஒனக்குத் தெரியுமா.. சாயிந்தரம் வீட்டுக்கு வரும்போது ரோட்டுல பாத்தேன். யாரோ பிரியாணிய கீழ போட்டு போய்ட்டாங்க போலருக்கு. பீசும் சாப்பாடும்மா செதறி கெடந்துச்சு. ஏதோ எலையல போட்டு வச்சாப்ல ரெண்டு நாயிங்க சுத்தி நின்னு விருந்து சாப்பாடு மாதிரி சாப்புட்டு இருந்துச்சுங்க. அத பாத்ததுல இருந்து எனக்கும் பிரியாணி சாப்பிடணும்போல ஆசையா இருக்கு பாட்டி...
..........
......
செத்துப் போன பாட்டியிடம் பேசிக் கொண்டே எப்போது தூங்கினோம் என்று தெரியாமல் அன்றைய இரவும் உறங்கிப் போனாள் ராணி...
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment