சுருட்டி வைத்த
நைந்த பாயாய்
ஒரு ஓரமாய்
சுருண்டிருக்கிறாள் கிழவி
பருத்த ஆடிக்குள்
பதுங்கியிருக்கும் கண்களினூடே
பலமுறை உடைந்து ஒட்டுப் போட்ட
அவ்வுருவத்தைக் கண்டான்
கிழவன்
தோல் சுருங்கிய தேகத்தில்
உள்ளங்கை ரேகையாய்
உடல் முழுவதும் வரி வரியாய்
வளைந்தும் நெளிந்தும் ஓடும் கோடுகள்
ஏழு பிள்ளைகளைச் சுகமாய் தாங்கிய
(அதிலொன்று கருவிலேயே சிதைந்துவிட்டது)
கனத்த வயிறென்றவொன்று
இப்போது அங்கில்லை
ஜாக்கெட்டுக்குள் கையை விட்டு
அக்குளில் சொறிந்து விடுகிறாள் கிழவி
வடிவிழந்து வற்றிப் போய்
தொங்குகின்றன முலைகள்
தேங்காய்நார் போல்
நரைத்த முடிகள்
விரைத்து நிற்கின்றன
எழுந்துச் சென்று
நிலைக் கண்ணாடியின்
முன்நின்று
தன்னுருவத்தைக் கண்டு
மனதிற்குள் சத்தமில்லாமல்
சொல்லிக் கொண்டான்
கிழவன்
மவராசி
கார்த்திக் பிரகாசம்...
நைந்த பாயாய்
ஒரு ஓரமாய்
சுருண்டிருக்கிறாள் கிழவி
பருத்த ஆடிக்குள்
பதுங்கியிருக்கும் கண்களினூடே
பலமுறை உடைந்து ஒட்டுப் போட்ட
அவ்வுருவத்தைக் கண்டான்
கிழவன்
தோல் சுருங்கிய தேகத்தில்
உள்ளங்கை ரேகையாய்
உடல் முழுவதும் வரி வரியாய்
வளைந்தும் நெளிந்தும் ஓடும் கோடுகள்
ஏழு பிள்ளைகளைச் சுகமாய் தாங்கிய
(அதிலொன்று கருவிலேயே சிதைந்துவிட்டது)
கனத்த வயிறென்றவொன்று
இப்போது அங்கில்லை
ஜாக்கெட்டுக்குள் கையை விட்டு
அக்குளில் சொறிந்து விடுகிறாள் கிழவி
வடிவிழந்து வற்றிப் போய்
தொங்குகின்றன முலைகள்
தேங்காய்நார் போல்
நரைத்த முடிகள்
விரைத்து நிற்கின்றன
எழுந்துச் சென்று
நிலைக் கண்ணாடியின்
முன்நின்று
தன்னுருவத்தைக் கண்டு
மனதிற்குள் சத்தமில்லாமல்
சொல்லிக் கொண்டான்
கிழவன்
மவராசி
இவளுக்கு முந்தி
நா போய் சேந்தரனும்
நா போய் சேந்தரனும்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment