Skip to main content

Posts

நான் கண்ட மனிதர்..

   வாழ்வில் மிக அவசியமான குணாதியசங்களைக் கற்றுக் கொள்ள அரிய புத்தகங்களையும் பெரிய ஞானிகளையும் அறிஞர்களையும் தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் முன்பின் தெரியாத ஒரு சாதாரண மனிதர்கள்  ஆழமான நிஜங்களை வெகு எளிதாக புகுத்தி விட்டுச் செல்வார்கள்.. அப்படி எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம்..    பட்டமளிப்பு விழாவிற்குக் கல்லூரிக்கு செல்வதற்காக  வேலைப் பார்க்கும் கம்பெனியில் விடுமுறையுடன் சேர்த்து  பல திட்டுகளையும் வாங்கிக் கொண்டு அன்று கிளம்பினேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில் வேண்டுமென்றே ""கட்"" அடித்து விட்டு ஊர் சுற்றுவதும் அதே கல்லூரிக்கு வருடம் கழித்து பழைய பொக்கிஷமான நினைவுகளைச் சுமந்துக் கொண்டு செல்வதும் அரிய சுகம். ஏனென்றால் அந்த கல்லூரி நாட்களுக்குப் பின்னால் கண்ணாடி முன் மட்டும் சொல்லப்பட்ட காதல், சொல்லி மறுக்கப்பட்ட காதல், இக்கட்டான சூழ்நிலையில் நண்பனின் உதவி, தன்னை பற்றி அப்பாவின் மனநிலை, கேட்கமாட்டார்கள் என்று தெரிந்தும் ஆசிரியர் சொல்லும் அறிவுரைகள் என்று மனதை விட்டு நீங்க மறுக்கும் சுகமான சுவடுகள் இருக்கும்.  ...
மழைத் துளிகளாய் இரு மனமெங்கும் பரவிக் கிடந்த நம் காதல் இன்று கிணற்றுத் தண்ணீரை அடைப்பட்டது ஏனோ..!! கார்த்திக் பிரகாசம்...
நீ கருவில் உருவாகி இவ்வுலகத்தில் காலெடுத்து வைக்க பத்து மாதங்கள் வருடக் கணக்காய்க் காத்திருந்தோம்.. உன்னை பள்ளியில் விட்டுச் சென்ற மறு நொடியில் இருந்தே நீ எப்போது  வீடு திரும்புவாய் என்று நொடிகள் நாட்களாகக் காத்திருந்தோம்.. உயர்ப் படிப்பை வெளியூரில் தான் படிப்பேன் என்றாய் அனுப்ப மனம் இல்லாவிட்டாலும் உன் விருப்பத்திற்காகச் சேர்த்து விட்டு நீ எப்போது வருவாய் என்று காலண்டரின் தேதிகளைப் பியித்துக் கொண்டுக்  காத்திருந்தோம்.. வேலைக்காக வெளிநாடு சென்ற நாள் முதல் நீ போன் செய்து எங்களுடன்  பேசும் மூன்று நிமிடத்திற்காக முப்பது மணி நேரம் காத்திருந்தோம்..  மகனே.. இப்பொழுது  கூட தினம் தினம் விடியும் போதெல்லாம் இன்று நீ கண்டிப்பாக வருவாய் என்று காத்திருக்கிறோம் முதியோர் இல்லத்தில்...!!!  கார்த்திக் பிரகாசம்..
உன்னை நேசித்து மட்டும் இருந்தால் என்றோ மறந்து இருப்பேன் ஆனால் நான் உன்னை சுவாசித்துக் கொண்டு இருக்கிறேன். மறக்க முயற்சித்தால் என் சுவாசம் நின்று விடும்... கார்த்திக் பிரகாசம்...
புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றாய் ஆசை ஆசையை உன் அருகில் வந்து நின்றேன் அப்போது எனக்கு தெரியவில்லை  புகைப்படத்தில் மட்டும் தான்  நீ என்னோடு இருக்க போகிறாய் என்று...!! கார்த்திக் பிரகாசம்..

நட்பால்..

நட்பைப் பற்றிச் சொல்ல எத்தனையோ கவிதைகள் எத்தனையோ கதைகள் எத்தனையோ பாடல்கள் எத்தனையோ படங்கள் இருந்தாலும்  நட்பைப் பற்றி  பேச மனம் ஏங்கிக் கொண்டே இருக்கின்றது. பெரியப்பா  மாமா சித்தப்பா சித்தி அத்தை என அனைத்து சொந்தங்களையும் உருவாக்கிக் கொடுத்த இறைவன் தோழன் தோழியை மட்டும் உறவுகளில் ஏன் படைக்கவில்லை. ஒரு வேளை எல்லா சொந்த பந்தங்களும் என்றைக்காவுது ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்திற்க்காக நம்மை விட்டு விலகிவிடும் என்பதனால் தான் தோழன் தோழியை மட்டும் உறவுகளில் படைக்காமல் உறவுக்காக படைத்திருப்பான் போலிருக்கிறது.. பள்ளிக் கல்வியில் தொடங்கி பாடையில் போகும் வரை உயிரோடு கலந்திருக்கும் நட்பு. பள்ளி, கல்லூரி மற்றும் வேலை செய்யும் அலுவலகம் என்று நட்பு வட்டாரங்கள் மாறினாலும் நட்பு மட்டும் மாறுவதே இல்லை. புதிய நண்பனிடம் தன் பழைய நட்பைப் பற்றி பேசுவது கூட சுகம் தான்.நண்பனைக் கலாய்த்து சிரிப்பதுண்டு ஆனால் கவலையில் கலங்கி நிற்கும் போது நண்பனின் கஷ்டமான  நிலையைக் கண்டு ஒரு போதும் சிரிப்பதில்லை. தன் நண்பனின் பெற்றோரைக் கூட அம்மா அப்பா என்று அழைக்கும்  பெருந்தன்மை நட்புக்கு உண்டு. ...
எதிர்ப்பார்ப்புகளை அளந்தும் ஏமாற்றங்களை அள்ளியும் தருகிறாய்.. ஏமாற்றங்களைக் கூட எதிர்ப்பார்க்க ஆரம்பித்துவிட்டேன் அது உன்னால் ஏற்படுவதென்றால்..... கார்த்திக் பிரகாசம்..