நீ கருவில் உருவாகி இவ்வுலகத்தில் காலெடுத்து வைக்க பத்து மாதங்கள் வருடக் கணக்காய்க் காத்திருந்தோம்..
உன்னை பள்ளியில் விட்டுச் சென்ற மறு நொடியில் இருந்தே நீ எப்போது வீடு திரும்புவாய் என்று நொடிகள் நாட்களாகக் காத்திருந்தோம்..
உயர்ப் படிப்பை வெளியூரில் தான் படிப்பேன் என்றாய் அனுப்ப மனம் இல்லாவிட்டாலும் உன் விருப்பத்திற்காகச் சேர்த்து விட்டு நீ எப்போது வருவாய் என்று காலண்டரின் தேதிகளைப் பியித்துக் கொண்டுக் காத்திருந்தோம்..
வேலைக்காக வெளிநாடு சென்ற நாள் முதல் நீ போன் செய்து எங்களுடன் பேசும் மூன்று நிமிடத்திற்காக முப்பது மணி நேரம் காத்திருந்தோம்..
மகனே..
இப்பொழுது கூட தினம் தினம் விடியும் போதெல்லாம் இன்று நீ கண்டிப்பாக வருவாய் என்று காத்திருக்கிறோம்
முதியோர் இல்லத்தில்...!!!
கார்த்திக் பிரகாசம்..

Comments
Post a Comment