Skip to main content

Posts

அந்தப் பிச்சைக்காரனின் முகம் மிகவும் வாடிப்போய் இருந்தது. யாரிடமும் பிச்சைக் கேட்காமல் அமைதியாகவே இருந்தான். எவராவது பிச்சை இட்டாலும் கூட முகத்திலும் உடலசைவிலும் எந்த சலனமும் இல்லாமல் சுவற்றில் வரைந்த சித்திரம் போல் இருந்தான். அருகில் இருந்த சக பிச்சைக்கார நண்பர்களுக்கு அன்று அவனை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அவன் பிச்சை எடுக்க வந்த நாளில் இருந்து ஒருநாள் கூட இப்படி சோர்ந்து போய் அமர்ந்ததில்லை.. எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும், வருபவர்கள் போகிறவர்களிடமெல்லாம் பிச்சைக் கேட்டு கொண்டும் பிசியாகவே இருப்பான்.  நாளின் முடிவில் அங்கிருப்பவர்களிலேயே அதிகப் பணம் அவன் தட்டில் தான் இருக்கும்.. சக பிச்சைக்காரன் நண்பன் அவனிடம் பேச முயன்றான். ஆனால் அவன் வாயை திறக்கவே இல்லை. அதனால் அவனை யாருமே தொந்தரவு செய்யவில்லை. அமைதியாவே இருந்ததால் அன்று அவன் தட்டில் காசு விழவே இல்லை. தனக்கு கிடைத்ததில் பாதியை அவனோடு பகிர்ந்துக் கொண்டான் சக பிச்சைக்கார நண்பன். ஒரு வாய் சாப்பிட்ட உடனே அவன் கண்களில் இருந்து சில துளிகள் எட்டிப் பார்த்தன. இந்த முறை அவன் நண்பன் கேட்கும் முன் அவனே பேச ஆரம்பித்தான். "அந...
உன்னையே நினைத்து கொண்டிருப்பதாலோ என்னவோ இப்பொழுதெல்லாம் இதயம் இயல்பை மீறி துடிக்கின்றது...!!! கார்த்திக் பிரகாசம்...

ஒரு தாயின் வேதனை...!!!

உன்னை வேலைக்காக வெளியூர் அனுப்பும் போது நான் உணரவில்லை இனி உன்னையும் என் பேரப் பிள்ளைகளையும் போனில் மட்டுமே கொஞ்ச முடியுமென்று...!!! பூட்டி வைக்க முடியா பாசத்துடனும் கண்ணில் காட்டிக் கொடுக்கும் கவலைகளுடனும் எந்நேரமும் உன் அழைப்பிற்காக போனை உடலின் ஓர் உறுப்பாக்கி காத்திருக்கிறேன்...!!! உன் வருகைக்காக வாசல் மீது ஒரு விழியையும் உன் அழைப்பிற்காக போனின் மீது ஒரு விழியையும் விசாலமாக வீசியெறிந்து விழித்திருக்கிறேன்...!!! கார்த்திக் பிரகாசம்...

அவஸ்தை...

நம் அப்பா நினைப்பது போல் நம்மால் இருக்க முடியாததும் நாம் நினைப்பதையெல்லாம் நம் அம்மாவிற்கு செய்ய முடியாததும்...!!! கார்த்திக் பிரகாசம் ...
சூறாவளி காற்றினால் சூறையாடப்பட்டு கற்பினை இழந்த பூக்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தவது போல் இருந்தது அடுத்து பெய்த அமைதியான மழை...!!! கார்த்திக் பிரகாசம் ...

"க்ளேட்ஸ் கிரகாம் ஸ்டைன்ஸ்"

கிரகாம் ஸ்டைன்ஸ் 1945ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்தவர். கிறித்துவ மதத்தை சேர்ந்தவர். இவர் 1965ஆம் ஆண்டு "ஒடிசா"வில் இருக்கும் "ஆஸ்திரேலியா கிறித்துவ தொண்டு சபை"யை பார்வையிட இந்தியா வந்தார். அங்கிருந்த தொழுநோயாளிகளைப் பார்த்து வேதனை அடைந்த அவர், ஓடிசாவிலையே தங்கி அவர்களுக்கு சேவை செய்ய தொடங்கினார். இவரைப் போலவே அங்கு சேவை செய்து கொண்டிருந்த "க்ளேட்ஸ்" என்ற ஆஸ்திரேலியப் பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். 1965 ஆம் ஆண்டு ஒரு முறை, தனது மகன்களுடன் விடுமுறையைக் கழித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த கிரகாம் ஸ்டைன்ஸ், ஓய்விற்காக ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தியிருந்த போது, ஒரு மர்மக் கும்பல் அவரையும், அவருடைய மகன்களையும் பலமாகத் தாக்கி அவர்களை வண்டியோடு தீவைத்து கொளுத்திவிட்டனர். கிரகாம் ஸ்டைனும் இரண்டு மகன்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்பொழுது அவருடைய மகன்களில் ஒருவனுக்கு வயது பத்து மற்றும் இன்னொருவனுக்கு வயது ஆறு. கிரகாம் ஸ்டைன் ஏழை எளிய இந்து மக்களுக்கு உதவி செய்வது போல் அவர்களை கட்டாயப...
அதீதமான தாடியினால் கன்னத்தில் முடியாமல் இதழ்களில் மட்டும் முத்தமிட்டு முத்தமிட்டு மூச்சுத் திணறல் ஏற்படுவதாய் அவளது சண்டையுடன் முடிந்தது அன்றைய சந்திப்பு...!!! கார்த்திக் பிரகாசம்...