கிரகாம் ஸ்டைன்ஸ் 1945ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்தவர். கிறித்துவ மதத்தை சேர்ந்தவர். இவர் 1965ஆம் ஆண்டு "ஒடிசா"வில் இருக்கும் "ஆஸ்திரேலியா கிறித்துவ தொண்டு சபை"யை பார்வையிட இந்தியா வந்தார். அங்கிருந்த தொழுநோயாளிகளைப் பார்த்து வேதனை அடைந்த அவர், ஓடிசாவிலையே தங்கி அவர்களுக்கு சேவை
செய்ய தொடங்கினார்.
இவரைப் போலவே அங்கு சேவை செய்து கொண்டிருந்த "க்ளேட்ஸ்"
என்ற ஆஸ்திரேலியப் பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர்.
1965 ஆம் ஆண்டு ஒரு முறை, தனது மகன்களுடன் விடுமுறையைக் கழித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த கிரகாம் ஸ்டைன்ஸ், ஓய்விற்காக ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தியிருந்த போது, ஒரு மர்மக் கும்பல் அவரையும், அவருடைய மகன்களையும் பலமாகத் தாக்கி அவர்களை வண்டியோடு தீவைத்து கொளுத்திவிட்டனர். கிரகாம் ஸ்டைனும் இரண்டு மகன்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்பொழுது அவருடைய மகன்களில் ஒருவனுக்கு வயது பத்து மற்றும் இன்னொருவனுக்கு வயது ஆறு.
கிரகாம் ஸ்டைன் ஏழை எளிய இந்து மக்களுக்கு உதவி செய்வது போல் அவர்களை கட்டாயப்படுத்தி கிறித்துவ மதத்திற்கு மாற்றுவதாக இச்சம்பவத்திற்கு காரணம் கூறப்பட்டது.
தனது கணவர் கொலையுண்டதால், "க்ளேட்ஸ்" தனது சேவையை நிறுத்திவிடவில்லை. தன்னுடைய கணவனையும் மகன்களையும் கொன்றவர்களை மன்னிப்பதாக அறிவித்தார்.
தொழுநோயாளிகளுக்கான தனது சேவையை அவர்களுடனையே தங்கி தொடர்ந்து மேற்கொண்டிருக்கிறார்..
அவருடைய சேவையைப் போற்றும் வகையில், 2005ஆம் ஆண்டு "பத்மஸ்ரீ" விருதை வழங்கி இந்திய அரசு கௌரவித்தது. மேலும் 2015 ஆம் ஆண்டு "சமூக சேவைக்கான அன்னை தெரசா நினைவு வருது" க்ளேட்ஸ்'க்கு வழங்கப்பட்டது...
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment